4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் குஜராத்: விசாவதர் தொகுதியை கைப்பற்றியது ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் பாஜகவுக்கு 1 மட்டுமே!
கேரள மாநிலத்தின் நிலம்பூர், குஜராத் மாநிலத்தின் காதி (எஸ்சி) மற்றும் விசாவதர், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மேற்கு, மேற்கு வங்க மாநிலத்தின் காளிகஞ்ச் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் திங்களன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.
விசாவதர் தொகுதியில் மீண்டும் ஆம் ஆத்மி 2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்த லில் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பூபத் பயானி வெற்றி பெற்றார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் கோபால் இத்தா லியாவும், பாஜக சார்பில் கிரித் படேலும், காங்கிரஸ் சார்பில் நிதின் ராணாபரியாவும் போட்டியிட்டனர். 21 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் இத்தாலியா 75,942 வாக்குகளுடன், பாஜக வேட்பாளர் கிரித் படேலை 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். கிரித் படேல் 58,388 வாக்குகள் மட்டுமே பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் நிதின் ராணாபரியா வெறும் 5,501 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 4 ஆவது இடம் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் விசாவதர் தொகுதியில் மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் நோட்டா 1,716 வாக்குகளை பெற்று 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. Y Y Y காதி தொகுதி பாஜக வெற்றியில் சந்தேகம் திங்களன்று காலை 8 மணிக்கு 5 சட்ட மன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணி க்கை தொடங்கியது. பாஜக ஆளும் குஜ ராத் மாநிலத்தின் காதி தொகுதி தவிர்த்து மற்ற 4 தொகுதிகளிலும் 9:05 மணி முதல் சுற்று முன்னிலை நிலவரம் வெளியானது. ஆனால் 10 மணி அளவில் காதி தொகுதியில் 2ஆம் சுற்றோடு, முதல் சுற்று முன்னணி நிலவரம் வெளியாகியது. முன்னிலை பெறாததால் வழக்கம் போல தேர்தல் ஆணையம் மூலம் பாஜக சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி யதாக சந்தேகம் கிளம்பியுள்ளது. மொத்தம் 22 சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற பாஜக வேட்பாளர் ராஜேந்திர குமார் (99,742 வாக்கு கள்) 39,452 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ்பாய் 60,290 வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்தார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெகதீஷ் பாய் 3,090 வாக்குகளுடன் 3ஆம் இடம் பிடித்தார். Y Y Y லூதியானா மேற்கு ; மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக கடந்த ஜனவரி மாதம் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்ப்ரீத் கோக்கி இறந்ததால் லூதியானா மேற்கு தொகுதி காலியா னது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் சஞ்சீவ் அரோராவும், காங்கிரஸ் சார்பில் பாரத் பூஷனும், பாஜக சார்பில் ஜிவான் குப்தாவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா (35,179 வாக்கு கள்) 10,637 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 24,542 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் பாரத் பூஷன் இரண்டாம் இடமும், 20,323 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் ஜிவான் குப்தா மூன்றாம் இடத்தை பிடித்தார். Y Y Y நிலம்பூர் : சுயேச்சை வேட்பாளர் மூலம் வெற்றி பெற்ற காங்கிரஸ் கேரள மாநிலம் நிலம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுவராஜூம், காங்கி ரஸ் சார்பில் அர்யதானும், பாஜக சார்பில் மோகன் ஜார்ஜும், முன்னாள் எம்எல்ஏ பி.வி.அன்வர் சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். 19 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அர்யதான் (77,737 வாக்கு கள்) 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 66,660 வாக்குகள் பெற்று சிபிஎம் வேட்பாளர் சுவராஜ் இரண்டாவது இடத்தையும், சுயேச்சை வேட்பாளர் அன்வர் 19,760 வாக்கு கள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றார். பாஜக வேட்பாளர் மோகன் ஜார்ஜ் 8,648 வாக்கு கள் மட்டுமே பெற்று 4ஆம் இடம் பிடித்தது. அன்வர் வாக்குகளை பிரித்ததன் காரண மாகவே காங்கிரஸ் நிலம்பூரில் வெற்றி பெற்றது. இல்லையென்றால் சிபிஎம் வேட்பாளர் சுவராஜ் வெற்றி பெற்று இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்டிஎப் தனது அரசியல் போராட்டத்தைத் தொடரும் : எம்.சுவராஜ் நிலம்பூரில் மக்களையும் நாட்டையும் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து மட்டுமே விவாதித்ததாகவும், இந்தத் தேர்த லில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படை யில் மக்களுக்காக அதிக வலுவுடன் முன்னே றுவோம் என்றும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் எம்.சுவராஜ் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ”நிலம்பூரில் ஒரு அரசியல் போராட்டமாக இடது சாரிகள் உருவாக்க முயன்றனர். உயர் மட்ட ஜனநாயக விவாதமாக நாங்கள் முன்னேற முடிந்தது. அதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அதே போல மக்களையும் நாட்டையும் பாதிக்கும் பிரச்சனைகளைநாங்கள் எப்போதும் நிலைநிறுத்த முயற்சித்தோம். எங்களை எதிர்த்தவர்கள் எழுப்பிய சர்ச்சை களில் நாங்கள் கவனம்செலுத்தவில்லை. வளர்ச்சிதான் விவாதப் பொருளாக இருந்தது. இயல்பாகவே, வரும் நாட்களில் ஒரு தேர்தல் குறித்து நெருக்கமான ஆய்வு நடத்தப்படும்” என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். Y Y Y திரிணாமுல், பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த காங்கிரஸ் மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் சட்ட மன்ற தொகுதியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திரிணா முல் காங்கிரஸ் வேட்பாளர் நசுருதீன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். கடந்த பிப்ரவரி மாதம் நசுருதீன் மரணமடைந்தார். இதனால் காளி கஞ்ச் தொகுதி காலியானது. இதையடுத்து நடந்த இந்த தொகுதியின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் (23 சுற்று) திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அலிபா அகமத் (1,02,759 வாக்குகள்) 50,049 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ஆசிஷ் கோஷ் 52,710 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் கபில் உத்தீன் 28,348 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள், காங்கிரஸ் வேட்பாளர் 10,000 வாக்கு கள் கூட வாங்க மாட்டார் என கூறின. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் கபில் உத்தீன் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை (25,076 வாக்கு கள்) விட 3,272 வாக்குகள் அதிகமாக பெற்று, 28,348 வாக்குகளுடன் திரிணாமுல், பாஜக விற்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.