“உத்தரகண்ட் மாநிலத்தில் 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங் கப்படும். சமையல் எரி வாயு சிலிண்டர் விலை ரூ. 500க்கு கீழ் விற் பனை செய்யப்படும். ஆண்டுக்கு 5 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 40 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்” என்று உத்தரகண்ட்டில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் டேராடூனில் இந்த அறி விப்புகளை வெளியிட்டனர்.