states

img

மணிப்பூரில் 330 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

மணிப்பூரில் 330 கிலோ  போதைப் பொருட்கள் பறிமுதல்

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக கட்ட விழ்த்து விட்ட வன்முறை யால் (குக்கி - மெய்டெய் இனக்குழுக்கு இடையேயான மோதல்) இன்று வரை அம்மாநிலம் இயல்பு நிலையை இழந்து கலவர பூமியாக காட்சி அளித்து வருகிறது. இந்த வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல லட்சம் மக்கள் சொந்த  மாநிலத்திலேயே=== அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். வன்முறை கட்டுக்குள் வராததால் 2025 பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்பு போதைப்பொருட்கள் புழக்கம் மிக மோசமான அளவில் அதிகரித்து வரு கிறது. பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் இருந்து இந்த கடத்தல், விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.  சில இடங்களில் மட்டுமே நேர்மை யான பாதுகாப்புப் படை அதிகாரிகள் கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றன. அதன்படி பொதுமக்களின் குற்றச்சாட்டில் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணிகளில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 330 கிலோ போதைப்பொருட்களை மணிப்பூர் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தீயில் எரிக்கப்பட்டது என உள்ளூர் ஊடங்ககள் கூறியுள்ளன. பாதுகாப்புடையினர் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை யை ஆதரிக்கின்றனர். அவர்களால் தான்  வன்முறை சம்பவங்களும் தீவிரமாகி வருகின்றன என மணிப்பூர் மக்கள் பாதுகாப்புடையினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.