சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் என 3 பேர் சுட்டுக்கொலை
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தில் நக்சல், மாவோ யிஸ்டுகளை ஒழிப்பு என்ற பெயரில் பழங்குடி மக்களை மலைப்பகு தியில் இருந்து துரத்த தீவிர நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் நடைபெற்று வருவது நாடறிந்த விசயம் தான். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிறன்று பாது காப்புப் படையினருடன் நடந்த மோதலில் மாவோயிஸ்டுகள் என 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில்,”அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோ யிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டை யில் இதுவரை 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்” என அவர் கூறி னார். ஆனால் உடலை பாதுகாப்புப் படை இதுவரை காண்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
