திரிபுராவில் சிபிஎம் அலுவலகங்கள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்
பீகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலு வலகத்தின் மீது பாஜக குண்டர்கள் தாக்கு தல் நடத்தி தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சிபிஎம் தலாய் மாவட்டச் செயலாளர் அஞ்சன் தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே கொண்டாட்டம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பாஜக குண்டர்கள் மாணிக்பந்தரில் கூடினர். நள்ளிரவு 11.30 மணியளவில் திடீரென பாஜக குண்டர்கள் மாணிக்பந்தரில் உள்ள சிபிஎம் துணைப்பிரிவு கட்சி அலு வலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்துக் கொளுத்தினர். மேசைகள், கட்சிக் கொடி கள் எரிக்கப்பட்டன. அதே இரவில், பாஜக குண்டர்கள் ஹலஹாலியில் உள்ள மற்றொரு சிபிஎம் அலுவலகம் மற்றும் மோகன் லால் ராய்க்குச் சொந்தமான தையல் கடை மீதும் தாக்குதல் நடத்தினர். கட்சி அலுவலகங்கள் மீதான இந்த தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் இந்த சம்ப வங்களில் ஈடுபட்டவர்களை உடனடி யாகக் கைது செய்யக் கோருகிறோம்” என்று அவர் கூறினார். அஞ்ச மாட்டோம் வடக்கு திரிபுரா மாவட்டச் செயலா ளர் அமிதாபா ராய் கூறுகையில், “உள்ளூர் எம்எல்ஏ ஜதாப் லால் நாத் தலைமையில் பாஜக குண்டர்கள் வெள்ளியன்று இரவு கலாச்செராவில் சிபிஎம் கட்சி அலுவலகத்தை சேதப் படுத்தினர். இந்த தாக்குதலில் மேசை கள், நாற்காலிகள் மற்றும் கட்சி ஆவ ணங்கள் அழிக்கப்பட்டன. இது ஜன நாயகத்தின் மீதான தாக்குதல். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்வாறு பெரும்பான்மையைப் பெற்றது என்பது முழு நாட்டிற்கும் தெரியும். தாக்கு தலுக்கு அஞ்ச மாட்டோம்” என அவர் கூறினார்.
