உ.பி.,யிலும் கூட்ட நெரிசல் 2 பேர் பலி ; 30 பேர் காயம்
உ.பி.,யிலும் கூட்ட நெரிசல் 2 பேர் பலி ; 30 பேர் காயம் ஞாயிறன்று பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹாரித்வாரில் உள்ள மான்சா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காய மடைந்தவர்களில் பலரது நிலைமை கவ லைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணி க்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரப்பிர தேசத்திலும் கோவில் கூட்ட நெரிச லில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள அவ்சனேஷ்வர் மகாதேவ் கோவிலில் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்க ணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். திங்கள்கிழமை அதிகாலை 2 மணிய ளவில் உயர் மின்னழுத்தக் கம்பியின் மீது குரங்குகள் தாவியதில், கம்பிகள் அறுந்து கோவிலின் கொட்டகை மீது விழுந்துள்ளது. இதனால், மின்சாரம் பாயும் அபாயத்தில் மக்கள் அங்கும் இங்கும் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற் பட்டுள்ளது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காய மடைந்தனர்.