ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக 2,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை
ஹரியானாவில் “டிராவல் வித் ஜோ” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்கள் அளித்ததாக பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஹரியானா மாநிலம் ஹிசார் காவல்துறையின் சிறப்பு புல னாய்வுக் குழு, ஜோதி மல்ஹோத்ரா வுக்கு எதிராக ஹிசார் நீதிமன்றத்தில் 2,500 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு அவர் உளவு பார்த்த தற்கான வலுவான ஆதாரங்கள் தங்களி டம் இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. மேலும், ஜோதியின் கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட எண்ணியல் தடயவியல் ஆய்வில், அவர் பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷு டன் நீண்ட உரையாடல்களை நடத்தி யிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வும் புலனாய்வு துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன. புவனேஸ்வரம்
நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி
ஒடிசா முன்னாள் முதலமைச்ச ரும், பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் ஞாயிறன்று புவ னேஸ்வரத்தில் உள்ள சம் அல்டிமேட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் உடல்நிலை தொடர்பாக தெளி வான எவ்வித தகவலும் வெளியாக வில்லை. எனினும் நீரிழப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம் அல்டிமேட் மருத்துவமனை நிர்வாக வட்டாரங்கள் கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நவீன் பட்நாயக் அனுமதிகப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு பிஜு ஜனதா தள கட்சியின் தொண் டர்கள் குவிந்து இருப்பதால் புவனேஸ்வ ரத்தில் பதற்றமான சூழல் நிலவி வரு கிறது.
தாறுமாறாக உயரும் தக்காளி விலை
விளைச்சல் குறைவால் நாட் டின் பல்வேறு நகரங்களில் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு 100 ரூபாயைத் தாண்டி யுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி யில் தக்காளியின் விலை கிலோவுக்கு 110-120 ரூபாய் என எகிறியுள்ளது. சென்னையில் தக்காளியின் விலை ஏற்கனவே கிலோவுக்கு 100 ரூபாயை எட்டியுள்ளது. மண்டல காய்கறிகள் விநியோ கத்தின் முக்கிய மையமான விஜய வாடாவிலும் (ஆந்திரா) தக்காளியின் விலை விரைவாக உயர்வதாக அறி விக்கப்பட்டு, அங்கு ஒரே இரவில் 24 ரூபா யிலிருந்து கிலோவுக்கு 70 ரூபாயாக மின் னல் வேகத்தில் ஏறியுள்ளது. இதற்கிடை யில், மொத்தச் சந்தையில் 80 ரூபாயைக் கூட தாண்டும் என்று உள்ளூர் வணிகர்கள் எச்சரிக்கிறார்கள். திருமலை
திருப்பதியில் கூட்ட நெரிசல் அபாயம்?
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப் பதி ஏழுமலையான் கோவிலில் சுதந்திர தினம், ஆடிக்கிருத் திகை, கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாள் என தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதி கரித்துள்ளது. இதனால் திருமலை முழு வதும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. கிருஷ்ணஜெயந்தி மற்றும் ஆடிக்கிருத்திகை நாளான சனிக்கிழமை அன்று ஒரே நாளில் 87,759 பக்தர்கள் தரி சனம் செய்தனர். 42,043 பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியலில் ரூ.4.16 கோடி காணிக்கை செலுத்தினர். ஞாயிறன்று நிலவரப்படி காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். திருமலையில் பக்தர்கள் கூட் டம் அதிகளவில் உள்ளதால் போதிய அறைகள் கிடைக்காமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல்கள் மற்றும் மாட வீதிகள், மடங்களில் தங்கி உள்ளனர். கூட்ட நெரிசல் அபாயம் ஏற் பட்டதாக செய்திகள் வெளியாகின.