states

img

பெரியாரும் பி.ஆரும்

1936ஆம் ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயப் பிரகாஷ் நாரா யணன் தமிழகத்திற்கு வந்த பொழுது அவரும், தமிழக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி யின் தலைவர்களில் ஒருவரான பி.ராமமூர்த்தியும், பெரியார் ஈ.வே.ரா. அவர்களைச் சந்தித்த னர். அவரை காங்கிரஸ் சோச லிஸ்ட் கட்சிக்குள் ஈர்த்தால் அது  பலமடையும் என்று இவ்விரு வரும் கருதினர். பெரியார், இவர்கள் கூறியதை பொறுமையுடன்கேட்டார். ஆனால், அவர் அதை ஏற்க வில்லை. ‘காங்கிரசிற்குள்ளி லிருந்து கொண்டு நீங்கள் எதை யும் செய்ய முடியாது’ என்று பெரி யார் அழுத்தந் திருத்தமாக கூறி னார்.

இந்த உரையாடல் முடிந்த பின்னர், அவர் ராமமூர்த்தியிடம் தனியாகப் பேசினார். ராமமூர்த்தி யின் குடும்பம், படிப்பு, அவர்  எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனார். உண்மையில் அவருக்கு அதில்  நம்பிக்கை உண்டா போன்ற கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டார். ராமமூர்த்தி அனைத் திற்கும் தக்க பதிலளித்தார். இவற்றால் திருப்தியடைந்த பெரியார், இறுதியாக ஒரு கேள்வி கேட்டார், ‘ஏன் தம்பி, கல்யாணம் ஆயிற்றா?’ ‘இல்லை’ என ராமமூர்த்தி பதில் சொன்னார். ஆனால் பெரியார் விடவில்லை. ‘உங்கள் சாதியில் 12 வயது, 20 வயதிலேயே கல்யாணம் செய்து வைப்பார்களே; கூடிப் போனால் 22 வயதுக்கு மேல்விட்டு வைக்க மாட்டார்களே! என்றார் பெரியார். ராமமூர்த்தி கூறினார். ‘நான் சாதி, மத நம்பிக்கை இல்லாதவன். வேறு சாதிப் பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டால் என் தாயாருக்கு மனம் நொந்து போகும். அவர் படிக்காதவர். பழைய வைதீகக் குடும்பத் திலேயே வளர்ந்தவர். நான் படிப்பில் கெட்டிக்காரனாக இருந் தைக் கண்டு பெரிய உத்தியோ கத்திற்கு வருவேன் என்று கனவு கண்டு கொண்டிருந்தார். அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனாலும், இப்போது என் பொது வாழ்வில் என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்.

என் தோழர் களிடம் அவருக்கு மதிப்பு உண்டு. அவர் மனதை நான் புண்படுத்த விரும்பவில்லை. என் தாயார் மறைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்துள்ளேன். இதைக் கேட்ட பெரியார் மகிழ்ச்சியடைந்தார். ‘தம்பி, நீ செய்த முடிவு நல்ல முடிவு. உன் தாயாரை நான் மெச்சுகிறேன். உனக்கு ஊக்கமளித்து வரும் தாயாரைப் போல பழைய காலத்து தாய்மார்களைக் காண்பது அபூர்வம். அவர்களுடைய மனது  புண்படக்கூடாது என்று நீ விரும்பு வதை மெச்சுகிறேன். நீ எப்பொழு தாவது கல்யாணம் செய்து கொண்டால், அப்போது நானி  ருந்தால் கட்டாயம் அதற்கு வரு வேன் என்று பெரியார் தானாகவே கூறினார். இந்த உரையாடல் நடை பெற்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று ராம மூர்த்திக்கும் அம்பாளுக்கும் சென்னையில் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

இதில் ஒரு சிலரே கலந்து கொண்டனர். ஆனால், சிறிது நேரத்தில் இந்தச் செய்தி பரவியதும். கட்சித் தோழர்கள் அன்று மாலையே திருமண வரவேற்பு நடத்த முடிவு செய்து சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு மண்டபத்தையும் ஏற்பாடு செய்தனர். தோழர்களின் அன்புக் கட்டளையை  ராமமூர்த்தியால் நிரா கரிக்க முடியவில்லை. ஆனால் அவருக்கு ஏற்கெனவேயே பெரி யார் கூறிய வார்த்தைகள் நினை விற்கு வந்தன. உடனே தொலை பேசி மூலம் பெரியாருக்கு தகவல் கூறி தனது திருமண வரவேற்பிற்கு  அவர் தலைமை தாங்க வேண்டு மென ராமமூர்த்தி கேட்டுக்கொண் டார். பெரியாரும், இதைக் கேட்டு  மகிழ்ச்சியடைந்ததுடன் வரவேற் பிற்கு அவசியம் வருவதாகக் கூறி னார். அதன் படி பெரியார் உரிய நேரத்தில் மண்டபத்திற்கு வந்து வரவேற்பு விழாவிற்கு தலைமை தாங்கி புதுமணத் தம்பதியை மனதார வாழ்த்திப் பேசினார்.