பாஜக அரசின் அடாவடிக்கு எதிர்ப்பு 14 678 சுகாதார ஊழியர்கள் சத்தீஸ்கரில் ராஜினாமா
ராய்ப்பூர் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக விஷ்ணு தியோ சாய் உள்ளார். இம்மாநிலத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் மருத்துவ ஊழியர்கள், செவிலி யர்கள் என 16,000க்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் தொடர் போராட்டம் நடத்தி னர். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற அரசு உட னான பேச்சுவார்த்தையில் 10 கோரி க்கைகளில் வெறும் 4 கோரிக்கை களை மட்டுமே அரசு ஏற்றுக் கொண்டது. பணி நிரந்தரம், சம்பள உயர்வு பற்றி அரசு வாய் திறக்க வில்லை. இதனால் சுகாதார ஊழி யர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே செப்டம்பர் 3ஆம் தேதி சுகாதார ஊழியர்களின் போரா ட்டத்தை முன்னின்று நடத்திய தேசிய சுகாதார இயக்க ஊழி யர்கள் சங்க தலைவர் டாக்டர் அமித் குமார் மிரி, பொதுச் செயலாளர் கவுஷ்லேஷ் திவாரி உட்பட 25 பேரை சத்தீஸ்கர் அரசு பணிநீக்கம் செய்தது. இந்நிலையில், பாஜக அரசின் இந்த அடாவடியை கண்டித்து சத்தீஸ்கர் முழுவதும் 14,678 சுகா தார ஊழியர்கள் ஒரே நாளில் தங்க ளது பதவியை ராஜினாமா செய்த னர். இதுதொடர்பாக போராட்டக் களத்தில் சுகாதார ஊழியர் ஒரு வர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,”25 சுகாதார ஊழி யர்கள் சத்தீஸ்கர் சிவில் சர்வீசஸ் நடத்தை விதிகள், 1965இன் படி தவ றான நடத்தை மற்றும் மனித வளக் கொள்கை 2018இன் பிரிவு 34.3-ஐ மீறியதால் நீக்கப்பட்டுள்ளனர் என அரசு கூறுகிறது. நீக்கப்பட்ட அனை வரும் ஊழியர் சங்கத்தின் முக்கியத் தலைவர்கள் ஆவர். சத்தீஸ்கர் அரசு நிர்வாகத்தின் இந்த அடக்கு முறை நடவடிக்கை முற்றிலும் நியா யமற்றது. இந்த நடவடிக்கையால் கோபமடைந்து, மாநிலம் முழுவ தும் 14,678 மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் ராஜி னாமாக்களை சமர்ப்பித்துள்ளனர். ஊழியர்கள் ராஜினாமா செய்தா லும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் வரை போராட்டங்கள் தொட ரும்” என அவர் கூறினார். பாஜக அரசின் அடாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தீஸ்கரில் ஒரே நாளில் 14,678 சுகாதார ஊழி யர்கள் ராஜினாமா செய்ததற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. முடங்கியது சத்தீஸ்கர் அரசு மருத்துவமனைகள் சுகாதார ஊழியர்கள் ராஜி னாமா மற்றும் வேலைநிறுத்தம் கார ணமாக மாநிலத்தின் பல இடங்க ளில் அரசு மருத்துவ சேவைகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து, பிறந்த குழந்தை பராமரிப்பு, பிசி யோதெரபி, தொற்றாத நோய்க ளுக்கான பரிசோதனை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கல், காசநோய் மருந்து விநி யோகம் உள்ளிட்ட பல சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளதாக சத்தீஸ்கர் அரசு சுகாதார அதிகாரி கள் தெரிவித்தனர்.