states

மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு

சென்னை,ஜன.31-  மின் நுகர்வோர்கள், ஆதார் எண்ணு டன் மின் இணைப்பு எண்ணை இணைப் பதற்கு பிப்ரவரி 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில், செவ்வாயன்று (ஜன.31)  செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:  “தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 கோடியே 67 லட்சம் நுகர்வோர்களில் ஏறத்தாழ 90.69 விழுக்காடு பேர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்திருக்கின்றனர். 9.31 விழுக்காடு மின் நுகர்வோர்கள் இன்னும் இணைக்கவில்லை.குறிப்பாக, வீடுகளைப் பொறுத்த வரை 2 கோடியே 32 லட்சம் நுகர் வோர்களில் 2 கோடியே 17 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இன்னும் ஒரு 15 லட்சம் பேர் இணைக்க வேண்டி யுள்ளது. கைத்தறியைப் பொறுத்த வரைக்கும் 74 ஆயிரம் இணைப்பு களில் 70 ஆயிரம் இணைக்கப்பட்டுள் ளது. இன்னும் 4 ஆயிரம் இணைப்பு கள் மட்டும் பாக்கி உள்ளது. விசைத் தறியைப் பொறுத்தவரை 1 லட்சத்து 63 ஆயிரத்தில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர். இன்னு மொரு, 9 ஆயிரம் பேர் பாக்கி உள்ளனர்.   மொத்தமுள்ள 9 லட்சத்து 44 ஆயிரம் பேரில், 5 லட்சத்து 11 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர். இன்னும் 4 லட்சத்து 33 ஆயிரம் குடிசைகள்தான் இணைக்க வேண்டிய நிலுவை இன்னும் அதிக மாக இருக்கிறது.எனவே, வரக் கூடிய பிப்ரவரி 15-ம்தேதி வரை, ஆதார் எண்ணுடன் மின்இணைப்பு எண்ணை இணைக்க கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதற்குள், அனைத்து நுகர்வோரும் இந்த இணைப்பை நிறைவு செய்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

;