ரயில்களை இயக்கும் லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே காவலர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புகொள்வதற்காக ரயில்களில் டேஷ்போர்டு வசதி செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த டேஷ்போர்டு லோகோமோட்டிவ் இன்ஜின் மாடல், வகைகளைப் பொறுத்தது. இந்த டேஷ்போர்டு, லோகோபைலட்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இது எப்போது, எப்படி தொடர வேண்டும் என்பதை லோகோ பைலட்களுக்கு குறிப்பால் உணர்த்துகிறது. எனவே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எந்த மாதிரி டேஷ்போர்டை கொண்டுள்ளது, அதில் சரக்கு ரயில் தடம் புரண்டதாக தகவல் உள்ளதா, அப்படியானால், கோரமண்டல் ஏன் லூப் லைனில் சென்றது என்பன போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் பதிலளிக்கப்பட வேண்டும்.