சென்னை,மே 4- திருவண்ணாமலை விசாரணைக் கைதி தங்கமணி மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி புலன் விசாரணை அறிக்கையின்படி, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புத னன்று (மே4) கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர், தங்கமணி மீது மது விலக்கு வழக்குப் பதிவு செய்து ஏப். 26 அன்று கைது செய்தனர். பின்னர், கிளைச் சிறைச்சாலையில் ஒப்படைத்தனர். அதன் பிறகு அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏப். 27 அன்று அவர் மரணம் அடைந்திருக்கிறார். இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து, நீதித் துறை நடுவரால் விசாரணை மேற் கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உடற்கூராய்வு முடிக்கப்பட்டது. காவல் துறை வடக்கு மண்டலத் தலைவர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இறந்த வரின் உறவினர்களிடம் நடந்த சம்ப வங்களையெல்லாம் கூறி, மருத்துவ மனையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையெல்லாம் காண்பித்து விளக்கி, புலன் விசாரணை நியாயமாக நடத்தப்படும் என்று தெளிவுபடுத்தினர். இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணை மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு சிபிசிஐடி விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது. தங்கமணியைக் கைது செய்து சிறை யில் அடைத்த காவல் துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்கள். மாநிலக் குற்றப் புலனாய் வுத் துறையின் புலன் விசாரணை அறிக்கையின்படி, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்தார்.