states

பாஜகவிற்கு “வானிலை” சரியில்லை உ.பி. மாநில பயணத்தை ரத்து செய்தார் மோடி

உத்தரப்பிரதேசம், பிப்.7- ‘மோசமான வானிலை’ காரணமாக தேர்தல் பிரச்சாரப் பேரணியில் உரை யாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் திங்கள்கிழமை பிஜ்னோர் செல்லவிருந்தார். மோசமான வானிலை காரண மாக அவர் தனது  பய ணத்தை ரத்து செய்தார். ஆனால் தொடர்ந்து காணொளி காட்சி மூலம் பிஜ்னோர் மக்களிடம் பேசிய மோடி, “முதலில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.  தேர்தல் ஆணையத்தின் சில தளர்வுகளுக்குப் பிறகு, பிஜ்னோருக்கு (உ.பி.) நேரில் வந்து எனது பிரச்சா ரத்தைத் தொடங்க நினைத் தேன். ஆனால் வானிலை காரணமாக,  வர இயல வில்லை. மீண்டும் ஒருமுறை வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே உங்களைப் பார்க்க முடிகிறது” என்றார். ஆனால் அவரது விமர்சகர்கள் உத்தரப்பிர தேச மாநிலத்தின் வானிலை எப்படி சரியாக இருந்தது என்று கூறி கேலி செய்தனர். பிஜ்னோரின்  வானிலை யின் ஸ்கிரீன் ஷாட்டை பலர்  பகிர்ந்துள்ளனர். வெப்ப நிலை 17 டிகிரியாகக் காட்டி யது. பிஜ்னோரில் வெயில்  அடிக்கிறது.  ஆனால் பாஜக-வின் வானிலைதான் மோசமாக உள்ளது என ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.