states

‘துருக்கியே’ ஆனது துருக்கி

நியூயார்க், ஜூன் 3- துருக்கி நாட்டின் பெயர் மாற்றக் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது. துருக்கி அரசாங்கத்தின்  கோரிக்கையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.  துருக்கி நாட்டின் பெயரை ‘‘துர்க்கியே’’ என மாற்றம் செய்யக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  துருக்கி அரசால் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு எழுதிய கடிதத்தில், ‘துருக்கி’ மற்றும் ‘துர்க்கி’ போன்ற சொற்களுக்குப் பதிலாக ‘துர்க்கியே’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதாக அரசு குறிப்பிட்டிருந்தது. ஐ.நா-வின் ஒப்புதலுக்கு காத்திருந்த நிலையில்  தற்போது துருக்கியின் பெயர் மாற்றக் கோரிக்கைக்கு ஐ.நா ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி துருக்கி என்ற பெயர் இனி ‘‘துர்க்கியே’’ என அழைக்கப் படும்.