states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தக்காளி ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை

சென்னை, மே 21 - பரவலாக பெய்து வரும் தொடர் மழை யால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு வியா பாரிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநி லங்களில் இருந்தே தற்போது வரை தக்கா ளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக வழக்கத்தை விட 2 மடங்கு தேவை அதிகரித்து கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துள்ளது. சனிக்கிழமையன்று (மே21) கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை  கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு  விற்கப்பட்டது. மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடை களில் ஒரு கிலோ தக்காளி ரூ.120ஐ கடந்தும் விற்கப்படுகிறது. கோவை, திருச்சி  உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி கடந்த 2 நாட்க ளுக்கு முன்பே ரூ.120ஐ கடந்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெரியார், பகத்சிங் பாடங்கள் நீக்கம்: கி.வீரமணி கண்டனம்

சென்னை, மே 21 - கர்நாடக மாநிலத்தில் பாட நூல்களில் தந்தை பெரியார், நாராயண குரு, பகத்சிங்  ஆகிய சமூகப் புரட்சியாளர்கள், சீர்திருத்த வாதிகள் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டிருப் பது கண்டனத்திற்குரியது என்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரி வித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமூக சீர்திருத்தவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் பாஜக ஆட்சிக்கு  வந்த பிறகுதான் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். குற்றவாளிகள்மீது இதுவரை உரிய நடவடிக்கை இல்லை. விஞ்ஞான மனப்பான்மையையும், சமூக சீர்திருத்த உணர்வையும் மக்கள் மத்தி யில் வளர்க்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால்,  ஒன்றிய பாஜக அரசோ மதவாதத்தையும், மூடநம்பிக்கைகளையும் வளர்க்கும்  போக்கில் தொடர்ந்து நடந்துகொண் டுள்ளது. ஒன்றிய அரசின் இந்தப் போக்கு  எல்லாத் திசைகளிலிருந்தும் தலைவர்க ளால் கண்டிக்கப்பட்டு வருவது வரவேற்கத் தக்கது. கர்நாடக மாநில அரசு பாடத் திட்டத்தி லிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள்பற்றிய பாடங்களைப் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகி றோம். இல்லையெனில், மதச்சார்பின்மைக் கொள்கை, சமூக சீர்திருத்த உணர்வுகளில் நம்பிக்கையுள்ள அனைவரையும் ஒன்று திரட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு வீரமணி தெரிவித்திருக்கிறார்.

பொது இடங்களில்  மஞ்சப்பை இயந்திரம்

சென்னை, மே 21 - பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச்  செயலாளர் சுப்ரியா சா `ஹூ தெரிவித் துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் “மஞ்சப்பை விற்பனை இயந்திரம் இறுதியாகி விட்டது. பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது.  சந்தை, பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது  இடங்களில் இவற்றை வைக்க பணிகள் நடை பெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

உலகப் பாதுகாப்புக்கான ஏற்பாடு கள் தொடர்பான சீனாவின் முன் முயற்சிக்கு கியூபா ஆதரவு தெரிவித்துள் ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சாச னம் மற்றும் ஏகபோகமற்ற சமூகம் ஆகிய வற்றின் அடிப்படையிலான உலகத்தை  உருவாக்க சீனா எடுக்கும் முயற்சிகளு க்கு கியூபா துணை நிற்கும் என்று அந் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் புரூனோ ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் பேசுகையில், சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இதுகுறித்து சில முன்மொழிவுகளை வைத்தார். 

பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை நீக்க இந் தோனேசியா முடிவு செய்திருக்கிறது.  உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை மற்றும் எண்ணெய் விநியோகம் ஆகிய வற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், மே 23 ஆம் தேதி முதல் மீண்டும்ஏற்றுமதி செய்யலாம்  என்று அந்நாட்டு அரசு அனுமதி அளித் துள்ளது. உள்நாட்டு சந்தைகளில் எண் ணெய் கிடைக்காமல் விலை கடுமையாக உயர்ந்ததால் ஏப்ரல் 18 ஆம் தேதியன்று ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

ரோம் நகரின் வீதிகளில் நடை பெற்ற போர் எதிர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற னர். உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடு கள் தொடர்ந்து ஆயுதங்களை விநி யோகித்து வருகின்றன. அதை நிறுத்து மாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளை வலியுறுத்தவே ரோம் நகரில்பேரணி நடந்தது. பேச்சு வார்த்தைக்கு இருதரப்பையும் வர வழைக்க தீவிரமான நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடுகள் இறங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.