states

மூடும் நிலையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள்!

திருப்பூர், நவ.28- மோடி அரசின் தவறான கொள்கைகளால் திருப்பூரில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலை கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம் சாட்டினார். திருப்பூரில் 105 ஆவது நவம்பர் புரட்சி தின  பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் தலைமையில் ஞாயிறன்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், தீக்கதிர் சந்தா தொகையை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  திருப்பூர் வீதிகளில் செங்கொடிகளை உயர்த்திப் பிடித்து அநீதிகளுக்கு எதிராகப் போராடி உயர் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூர்கிறது

இந்த செந்தொண்டர் பேரணி. சமத்துவம், ஜனநாயகம், சகோதரத்துவம் என்ற இந்த மூன்றையும் உயர்த்திப் பிடித்து  மக்களுக்கான போராட்டத்தில் முன் இருக்கக் கூடியவர்கள்தான் செந்தொண்டர்கள். கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் நரேந்திர மோடி அரசு தட்டுகளை தட்டுங்கள் என்று வெற்று  வாய்ச்சவடால் (ஜும்லாக்கள்) அடித்துக் கொண்டிருந்தபோது, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்களப் பணியாளர்களாக செந்தொண்டர்கள் சேவை  செய்து கொண்டிருந்தனர். அரசு மருத்துவமனை களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களையும், மக்க ளுக்கு தேவையான உணவு தானியங்கள் வழங்கியும் நிவாரணப் பணிகளை செய்து கொண்டிருந்தார்கள். மோடி அரசால் கைவி டப்பட்ட எண்ணற்ற புலம்பெயர்ந்த தொழிலா ளர்களுக்கு பக்க பலமாக இருந்து சேவை செய்து  கொண்டிருந்தார்கள். சேவை செய்ய வேண்டும்  என்ற மனப்பான்மையில் இந்த பேரணியில் பங்கு பெற்ற பெண்களை நான் பெரிதும் பாராட்டு கிறேன்.

பல கட்சிகளில் பேரணி நடத்த பணம் கொடுத்து  ஆள் சேர்க்கிறார்கள். பணம் கொடுத்து வாக்கு களை வாங்குகிறார்கள். ஆனால் பேருந்து நடத்துநராக இருக்கக்கூடிய ஒரு தொழிலாளி தனது சொத்தில் ஒரு பங்கை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு கொடுக்கிறார் என்றால் அதன்  அர்த்தம் என்ன? பல தாக்குதல்களை எதிர்  கொண்டு, தத்துவார்த்த புரிதலுடன், தொடர்ந்து மக்களுக்காக போராடிக் கொண்டிருப்ப தால்தான்.  பாஜகவின் கலாச்சார ரீதியான தாக்குதல் களுக்கு எதிராகவும், அதன் கொள்கைகளுக்கு எதிராகவும் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவின் கட்டமைப்பான ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்யும் நமது அரசியல் அமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும்.

வெளியேறும் தொழில்கள்

மோடி அரசு செயல்படுத்தும் கொள்கை களால் ஏதோ ஒரு வகையில் நாம் ஒவ்வொரு வரும் பாதிக்கப்படுகின்றோம். மோடி அரசின் தவறான கொள்கைகளால் திருப்பூரில் ஆயி ரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடும் நிலை யில் உள்ளன. அதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை யில் உள்ளனர். மேலும் தொடர்ந்து மூலப் பொருட்களின் விலை உயர்வால் சிறு, குறு தொழில்கள் முடக்கப்படுகிறது. தொழில் வாய்ப்புகள் வேறு நாடுகளை நோக்கி செல்கி றது. மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கு வங்கி களின் வராக்கடன் என்ற அடிப்படையில் ரூ.10  லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு லோன் கொடுத்தால் 90 நாட்களில் கட்ட வேண்டும். இல்லையென்றால் வராக்கடன் என  அறிவித்து தங்களின் குழந்தைகளின் கல்விக் காக கூட கடன் வாங்க முடியாத சூழலில் தள்ளப்படுகிறார்கள். மோடி அரசின் இந்த இரட்டை நிலைப்பாடு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இங்கு நிலவும் இந்த நெருக்கடியை திமுக  அரசு உணரும் என்று நம்புகிறோம். தமிழகத்தில் மின் கட்டண அதிகரிப்பை திரும்பப் பெற வேண்  டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கி றார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை  உயர்வால் பெண்கள் தான் பாதிக்கப்படு கிறார்கள். இந்த பொருளாதார பிரச்சனை களை மோடி அரசு மேலும் அதிகரிக்கிறது

மக்கள் பிரச்சனைகளை  திசை திருப்பும் மோடி அரசு

100 நாள் வேலைத்திட்டத்திற்கு போதுமான நிதியை ஒதுக்காமல் மோடி அரசு நீர்த்துப் போக  செய்கிறது. இந்த பிரச்சனைகளை திசை திருப்ப  மக்களை பிரிக்கும் மனு வாத, இந்துத்துவா வை பயன்படுத்துகிறார்கள். மேலும் தனது அர சின் தோல்வியை மறைக்க வெறுப்பை கக்கு கிறார்கள்.  இந்த நாட்டில் நாள் ஒன்றுக்கு  86 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் பிரதமரோ, அமித் ஷாவோ வாய் திறப்பதில்லை. அதுவே சிறுபான்மையினரின் பெயர் இருந்தால் அதை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள். குஜ ராத்தில் பில்கிஸ் பானுவை கும்பல் பாலியல்  வன்கொடுமை செய்து மூன்று வயது குழந்தை யை கொன்று அவரின் மொத்த குடும்பத்தை  படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு தேர்தலில்  போட்டியிடும் வாய்ப்பை தந்துள்ளார் மோடி.  இந்த நடவடிக்கைக்கு அந்தக் கட்சியே வெட் கப்பட வேண்டும். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகப் போராடி சோஷலிசத்தை நிலை நாட்டிய இந்த நவம்பர் புரட்சி தினத்தில் எந்த சமரசமும் இல்லாமல் இந்தியா முழுவதும் செங்கொடி ஏந்தி ஜனநாய கத்திற்காகவும், இளைஞர்களின் வேலைக்காக வும் போராடுவோம் என்றும், மோடி அரசை எதிர்த்து நிற்போம் என்றும் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார். அவரது ஆங்கில உரையை எம்.கிரிஜா தமி ழில் மொழியாக்கம் செய்தார்.
 

;