states

பிணவறையில் உயிருடன் இருந்த மேற்குவங்க இளைஞர்!

புவனேஸ்வர், ஜூன் 7- ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார் எனக் கருதி, பிண வறையில் போடப்பட்ட 35 வயது இளைஞர், உயிருடன் இருந்தது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இரண்டு கால்களையும் இழந்த  நிலையில் இருந்த அந்த இளைஞ ருக்கு, தற்போது மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 2 அன்று, ஷாலி மர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்  பிரஸ், பெங்களூரு- ஹவுரா எக்ஸ் பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், செவ்வாய்க்கிழமை வரை பலியானோரின் எண்ணிக்கை 288-ஐ எட்டியுள்ளது. இவர்களில் 205 பேரின் உடல்கள் அடையா ளம் காணப்பட்டு, வேறு இடங்க ளுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதே நேரம், 83 உடல்கள் அடையாளம்  காண முடியாமல் தற்காலிக பிண வறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தான், இறந்து விட்டார் என இந்த தற்காலிக பிண வறையில் போடப்பட்ட ராபின் நையா என்ற 35 வயது இளைஞர், உயிருடன் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிணவறைக்குள் வைக்கப்  பட்டுள்ள சிதைந்த உடல்களை  அகற்றும் பணியில் மீட்புக்குழு வினர் ஈடுபட்டிருந்தபோது, அவர் களில் ஒருவரின் காலைப் பற்றி, ராபின் நையா சிறிய முனகலுடன்,  “நான் உயிருடன் இருக்கிறேன். இன் னும் சாகவில்லை. தயவுசெய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள்” என கேட்டுள்ளார். 

இதனால் பரபரப்பிற்கு உள் ளான மீட்புக்குழுவினர், ராபின் நையாவுக்கு உடனடியாக சிறிது தண்ணீர் கொடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், உயர்  அதிகாரிகளின் உத்தரவின் பேரில்  ராபின் நையாவை உடனடியாக  சிகிச்சைக்காக மருத்துவமனைக் குக் கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு கால்களை யும் இழந்துவிட்ட அவர், தற்போது, ஆபத்தான நிலையில் மேதினிபூர்  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் எலும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்குவங்க மாநிலம் வடக்கு  24 பர்கானாஸில் உள்ள சர்நே காலி கிராமத்தைச் சேர்ந்தவரான ராபின் நையா, தனது கிராமத்தைச்  சேர்ந்த  மற்ற 7 பேருடன், ஹவுராவிலி ருந்து ஆந்திராவிற்கு வேலை தேடி  கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பய ணம் செய்துள்ளார். இதில், நையா வுடன் பயணித்த 6 நண்பர்கள் குறித்த  தகவல்கள் இன்னும் தெரிய வில்லை. அதுமட்டுமல்ல, ஜூன் 2 அன்று  நடந்த கோரமண்டல் ரயில் விபத்து,  நையாவின் குடும்பம் எதிர்கொண்ட  2-ஆவது ரயில் விபத்துச் சம்பவமா கும். 2010-ஆம் ஆண்டு மேற்கு மிட்  னாப்பூரில் 148 பேரைப் பலிவாங்கிய  ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் ராபினின் மாமா சிக்கி னார். நல்வாய்ப்பாக அப்போது அவர் உயிர் பிழைத்தார். தற்போது  ராபின் நையா தனது 2 கால்களை யும் இழந்துள்ளார்.

பிணவறையில் மகனை மீட்ட தந்தை..

முன்னதாக, இதேபோல இறந்து விட்டார் எனக்கருதி பிணவறையில்  வைக்கப்பட்ட பிஸ்வஜித் என்ற  இளைஞரை, அவரது தந்தை ஹெல ராம் மாலிக் என்பவர் நேரில் வந்து  பார்த்துக் கூறியதற்குப் பிறகே, அவர் உயிருடன் இருந்தது தெரிய வந்தது. தற்போது, ராபின் நையா வும் பிணவறையிலிருந்து உயிரு டன் எழுந்துள்ளார்.  இதன்மூலம், ஒடிசா விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை, மருத்துவர்கள் மூலம் முறையாக பரிசோதிக்காமலேயே, ஒன்றிய அர சின் ரயில்வே நிர்வாகமும், ஒடிசா  மாநில அரசும், அவர்கள் இறந்து விட்டார்கள் என்று முடிவுகட்டி பிணவறைக்கு அனுப்பி இருக்கும் கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்  ளது. அதிர்ச்சி, நீரில் மூழ்குதல் போன்ற திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும்போது ‘சஸ்பெண்டடு அனி மேஷன்’ என்று அழைக்கப்படும் ஒரு  நிலை ஏற்படும். அப்போது ஒரு நப ரின் உயிர்ச் சக்திகள் குறைந்தபட்ச மாகச் செயல்படும். இதனைக் கூர்ந்து கவனித்து, சுயநினைவின்றி இருக்கிறாரா, அல்லது இறந்து விட்டாரா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், மீட்புப் பணி மற்றும் சிகிச்சைக்கு ராணுவத்தின் மருத்து வக் குழுவையே அனுப்பிவைத்த தாக மோடி அரசு கூறியும், காயம்  அடைந்திருப்பவர்கள் இறந்து விட்டார்களா, உயிருடன் இருக்கி றார்களா? என்பதைக் கூட பரிசோ திக்க முடியாத லட்சணத்தில்தான் மீட்புப்பணி நிர்வாகம் இருந் துள்ளது என்பதையே நடந்துள்ள சம்பவங்கள் காட்டுகின்றன. பிஸ்வஜித், ராபின் நையா போன்று, விபத்தில் சிக்கிய எத்  தனை பேர் உயிருடன் இருந்தார் களோ? அல்லது இப்போதும் இருக்  கிறார்களோ; மோடி அரசுக்குத்தான் வெளிச்சம்.

;