states

தமிழகத்தில் நடக்கும் போர்! ஆளுநர் ரவியை திரும்பப் பெறுக! - ஆளுநர் எதிர் அரசு

குறுகிய கால நட்புறவுக்கு பிறகு தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் இடையே உள்ள  அரசியல் விரோதம் அதிகரித்து வருகிறது.  பிரசார் பாரதி நிகழ்ச்சியில் மாநில  கீதமான தமிழ்த்தாய் வாழ்த்தை திரித்து ஒலிக்கச் செய்ததில் இந்த முறை மோதல் உருவானது. இது இசைக்கப்படும் வேளையில் ஒருவர் உட்கார்ந்திருந்த பிரச்சனை யில் இந்த கீதம் இசைக்கப்படும் பொழுது பங்கேற்பாளர்கள் நிற்க வேண்டும் என்ற சட்டப்பூர்வ அல்லது நிர்வாக உத்தரவு இல்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்ததன் பின்னணி யில், 1970 முதல் அதிகாரப்பூர்வ விழாக்களில் வணங்கி வரவேற்கும் பாடலாக இசைக்கப்பட்ட  தமிழ்த்தாய் வாழ்த்து, டிசம்பர் 2021 முதல் மாநிலத்தின் கீதமாக அறிவிக்கப்பட்டது

தேசிய கீதத்திலிருந்து நீக்குவாரா?

.ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 55 வினாடிகள் ஒலித்த இந்த கீதத்தில் “திராவிட நல் திருநாடும்” என்னும் சொல் தவிர்க்கப்பட்டது. இது  கவனக் குறைவு என விவரிக்கப்பட்டாலும் மேடை யில் அதை சரி செய்ய எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தவறுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திரு ரவி ஆளுநரா?அல்லது ஆரி யரா? ஒருவேளை ஆரியராக இருந்தால் திராவிடம் குறித்த அலர்ஜியால் அவதிப்படும் அவர் தேசிய கீதத்திலிருந்து திராவிடம் என்ற வார்த்தையை நீக்கும் ஆலோசனையை முன்மொழிவாரா? என்று திரு ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தன் கருத்துடனேயே முரண்பாடு

ஆளுநர் இதைக் கண்டு கோபமடைந்து ஆரியர் என்ற குறிப்பை இனவெறி என விவரித்தார். ஆரியர்கள், திராவிடர்கள் என்ற  கருத்து இனரீதியான பிளவு என்பதை காட்டி லும் புவியியல் அடிப்படையுடன் தொடர்புடை யது.ஆங்கிலேயர்கள் தங்களின் தேவைக்கேற்ப அதை இனம் என மாற்றினர் என்று ஆளுநர் தன்னுடைய நம்பிக்கையை ஏற்கனவே வெளிப் படுத்தி இருந்தார். ஆனால் தன்னுடைய விளக்கத் திற்கு மாறாக அவரே ஆரியர் என்னும் குறிப்பை இனவெறி என்று விவரிக்கிறார் .தனக்கு எதிராக  முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முதலமைச்ச ரின் உயர் அரசியல் அமைப்பு பதவியின் கண்ணி யத்தை குறைத்து விட்டதாகவும் வாதிட்டார்.

ஆட்சி நிர்வாகம் சீர்குலைவு

பாடகர்கள் ஒரு வார்த்தையை விட்டதற்கு ஆளுநரை பொறுப்பாக்குவது சரியல்ல என்பது  உண்மை. ஆனால் திராவிடம் என்பது பிரிவினை வாத உணர்வை வளர்க்கும், ஒரே இந்தியா என்ற எண்ணத்தை ஏற்காத  சூழலை  உருவாக்கும், காலாவதியான ஒரு சித்தாந்தம்  என தொடர்ந்து பேசி வந்துள்ளார். மாநிலத்தின் இரு மொழி கொள்கை மொழியியல் அடிப்படையில் நிற வெறிக்கு வழி வகுக்கிறது என்றும் கூறினார். கடந்த 50 ஆண்டுகளாக தமிழக மக்களின் மனதில் ஏராளமான நச்சுத்தன்மை புகுத்தப் பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய கருத்துக்கள் அவர் திராவிடம் பற்றிய குறிப்புகளுக்கு எதிரானவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. திரு ரவியை நேரடியாக திரு ஸ்டாலின் குற்றம் சாட்டியது சரியல்ல. ஆனாலும் ஆளுநருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நடக்கும் மோதல்களில் ஆட்சி நிர்வாகம் பலியாகிறது என்பது முக்கிய பிரச்சனையாகும்.

ஆர்.என்.ரவியை  திரும்பப் பெற வேண்டும்

அரசின் செயல்பாட்டின் மீதான அவரது அதிக (தலையிடும்)நாட்டம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான அவரின் விரோதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் திரு ரவியை இப்போது  திரும்பப் பெற வேண்டும். அவருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான நல்லுறவுகள் மீட்பதற்கு அப்பாற்பட்டவை. ஜன நாயக அமைப்புகளை அவருடைய செயல்கள் பாதிப்பதால் அரசுக்கும் இது ஆரோக்கியமான தல்ல.

தி இந்து தலையங்கம். 21/10/24
- தமிழில்:  கடலூர் சுகுமாரன்