states

வளர்ச்சியைத் தடுக்கிறார்கள்

பெய்ரூட், ஜூன் 6- தங்கள் நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிட்டு அமெரிக்கா தடுக்கிறது என்று லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சபி அல் தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சொந்தமாகவே எரிபொருள் வளங்களை எடுத்து, உள்ளூர் தேவை களை சமாளிக்கும் திறன் லெபனா னுக்கு இருக்கிறது. ஆனால் எண்ணெய் எடுப்பது மற்றும் எரிவாயுவைக் கண்டு பிடிப்பது ஆகிய லெபனானின் பணிகளை அமெரிக்கா தடுக்கிறது. லெபனானில் உள்ள சிலர் அமெரிக்காவின் பக்கம் நின்று நாட்டின் நலனுக்கு எதிரான வேலைகளில்  இறங்கியுள்ளனர். பல அரசியல்வாதி களின் ஊழல் மற்றும் ஒழுக்கமற்ற நட வடிக்கைகள் நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டன” என்றார்.