states

அரசியலமைப்பை பாதுகாக்க சின்ஹா வெற்றி அவசியம்

குடியரசுத் தலைவர் பதவி என்பது நாட்டின் மூத்த மற்றும் முதன்மை பதவியாகும். பாஜக அரசால் நடத்தப்படும் சட்டவிரோத ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். அவருக்கு மதவாதத்துக்கு எதிராக இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற வேண்டும். நமது கூட்டணி கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒருசேர வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.