states

விபத்து தடுப்புக்கான நிதி ரூ.943 கோடியில் ஒரு பைசாவை கூட செலவிடாத ரயில்வே!

புவனேஷ்வர், ஜூன் 6- விபத்து தடுப்புக்கான நிதி ரூ. 943 கோடி யில், தென்கிழக்கு ரயில்வே ஒரு பைசாவைக் கூட செலவிடாதது வெளிச்சத்திற்கு வந்துள் ளது. 278 பேரைப் பலி கொண்ட ஒடிசா ரயில்  விபத்திற்கான காரணத்தை, ரயில்வே இது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு கார ணமா? அல்லது மனிதத் தவறு காரணமா? என  பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப் பட்டு வருவதாக ரயில்வே தெரிவித் துள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிரீன்  சிக்னல் கிடைத்ததாலேயே, லோகோ பைலட்  சரக்கு ரயில் நின்ற வழித்தடத்தில் ரயிலை  இயக்கியதாகவும், மின்னணு இண்டர்லாக் கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரண மாகவே இந்த விபத்து நடந்து இருப்பதாக வும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ் ணவ் தெரிவித்தார். கடைசியாக, இந்த விபத்துக்கு ஏதேனும் நாச வேலை காரணமாக இருக்கலாம் என்ற தங்களின் வழக்கமான குற்றச்சாட்டை, காரண மாக முன்வைத்துள்ள ஒன்றிய பாஜக அரசு, ரயில்வே பரிந்துரை என்ற பெயரில், சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

ரயில்கள் மோதிக்கொள்வதைத் தடுப்ப தற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கவச்’  தொழில் நுட்பம், ஷாலிமர் - சென்னை கோர மண்டல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் அமைக் கப்படாதது, ஏன்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு இப்போதுவரை மோடி அரசால் பதிலளிக்க முடியவில்லை. குறிப்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பே  சிக்னல் அமைப்பில் குளறுபடிகள் இருப் பதைச் சுட்டிக்காட்டி தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு கடிதம் எழுதியதாகவும் இது  குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கும் மோடி அரசிடம் பதில் இல்லை. விபத்து பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அமைக்க, ஒருவேளை அரசிடம் போதிய நிதி  இல்லை; அல்லது ரயில்வே-க்கு ஒதுக்கப்பட வில்லை என்று கூட அவர்கள் காரணம் கூற லாம். ஆனால், அவ்வாறும் கூறி, மோடி அரசால்  தப்பிக்க முடியாது என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, விபத்து தடுப்பு பாதுகாப்பு அமைப்பான ஆண்டி கொலிஷன் சிஸ்டத்திற்  காக ஒதுக்கப்பட்ட ரூ. 943 கோடி ரூபாய் நிதியில், ஒரு பைசாவைக் கூட, கடந்த 3  ஆண்டுகளில் தென்கிழக்கு ரயில்வே செலவு செய்யவில்லை என்பது அம்பலமாகி இருக்கி றது. தென்கிழக்கு ரயில்வேயின் செலவினக் கணக்கு புத்தகங்களில் உள்ள தரவுகள் மூலம்  இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற பாலசோர்,  இந்த தென்கிழக்கு ரயில்வே மண்டலத்திற்குள்  தான் வருகிறது என்பதும் இங்கு குறிப்பி டத்தக்கதாகும். எனவே, பயணிகள் பாதுகாப்பு விவகா ரத்தில், மோடி அரசின் தலைமையிலான ரயில்வே காட்டிவந்த அலட்சியமே, ஒடிசா ரயில்  விபத்து மற்றும் அதில் 278 பேர் பலியான தற்கு காரணம் என்று குற்றச்சாட்டு மீண்டும் வலுவடைந்துள்ளது.

;