states

விவசாயிகள் சங்கத் தலைவர்களை சந்திக்க மறுத்த ஆளுநர்

சென்னை,நவ.26 தில்லி விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி மோடி அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டிக்கும் வகையில் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.  பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகி கள் ஆளுநரிடம் மனு அளிக்கச் சென்றனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் கிண்டி வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அங்கிருந்த விவசாயிகள் சங்கத் தலைவர் கள்,  ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க புறப்பட்டனர். ஆனால் ஆளுநரி டமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து விவசாயிகள் சங்கத் தலை வர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம், காவல் துறை அதிகாரிகள் மூலம் ஆளுநரின் செயலாளரை சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆளுநர் அலுவலகத்திலுள்ள அதிகாரிகள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் நேரடி யாக மனுவை பெற்றுக் கொள்ளமாட்டோம். மாநில அரசு அதிகாரிகள் மூலம் அனுப்பி னால் பெற்றுக் கொள்வோம் என தெரிவித்து விட்டனர்” என்றார். இதையடுத்து, விவசாயிகள் சங்கத் தலை வர்கள் தமிழக அரசின் பொதுத்துறை செய லாளர் ஜெகன்நாதனை சந்திக்க காவல் துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஏற்பாடு செய்தார். பிறகு, தலைமை  செயலகத்திற்கு சென்று பொதுச் செயலாள ரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

;