states

ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக 1.1 லட்சம் குற்ற வழக்குகள்

புதுடில்லி,அக்.7- சமீப காலமாக, குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்திற்கு பெறப்பட்ட தரவுகளின்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 ஜூன் வரையிலான காலகட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக நாடு முழு வதும் 1லட்சத்து 10 ஆயிரத்தி 194 புகார்கள்  தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தால் (என்சிபிசிஆர்) பெறப் பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் படி அளிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு கிடைத்த  பதிலில் 2019 ஆம் ஆண்டு 37 ஆயிரத்தி 973புகார்கள் பெறப்பட்டன.  2020ல் கோவிட் தொற்று பரவிய காலத்தில், 5,154 புகார்களும், 2021ல் 5,249 புகார்களும், 2022ல் 4,243 புகார்களும் பெறப்பட்டன.  2023ல், ஆணையத்திற்கு வந்த புகார்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை காட்டிலும் 10 மடங்கு அதிகரித்து  41,746 ஆக இருந்தது. 2024 ஜூன் 30 வரை என்சிபிசிஆர் இல் 57,496 புகார்கள் நிலுவையில் இருந்தன.  அதே சமயம் 2019 ஏப்ரல் 1  ஆம் தேதிக்கு முன்பு ஆணையத்தில் 2,797 புகார்கள் நிலுவையில் இருந்தன.  ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர் சுபாஷ் தாக்கல் செய்த தகவல் உரிமை அறியும் மனு வுக்கு கிடைத்த பதிலில் இந்த அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 2019 ஏப்ரல் மற்றும் 2023 ஆகஸ்ட்  மாதத்திற்கு இடையில் குழந்தைகள் உதவி  எண் 1098 மூலம் ஒரு புகார் கூட வரவில்லை.  அதைத் தொடர்ந்து சைல்ட் லைன் இந்தியா  அறக்கட்டளையிலிருந்து சைல்ட் ஹெல்ப்லைன் எண். 1098 திரும்பப் பெறப்பட்டு  மாநிலங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  மேற்கூறிய ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அதிக எண்ணிக்கையிலான அதாவது 31,354 வழக்கு கள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு வகைகளில் இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பானவை. இந்தக் காலகட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 11,602 வழக்குகள் பதிவாகி யுள்ளது. இம்மாநிலம் அகில இந்திய அளவில் 2வது இடத்தில் உள்ளது.  10,884 வழக்குகளு டன் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்திலும்,  10,369 வழக்குகளுடன் ராஜஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளன. இவை தவிர, தமி ழகத்தில் 5,855, ஒடிசாவில் 4,955, ஜார்க்கண்டில் 3,696, கர்நாடகாவில் 3,275, குஜராத்தில் 3,220, தில்லியில் 2,846, அசாமில் 2,609, பீகாரில் 2,409, ஹரியானாவில் 2,3171 வழக்குகள் இந்த கால கட்டத்தில் பதிவாகியுள்ளன.  முதல் நான்கு இடங்களை பெற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.