states

img

5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு தினசரி மின்தேவை குறைந்தது

சென்னை,நவ.2-  தமிழகத்தில் தினசரி மின்தேவை16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  விடுமுறை விடப்பட்டதால் தொழிற்சாலைகள், கல்விநிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படவில்லை. இதனால், தினசரி மின்தேவை குறைந்துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளன்று தமிழகத்தில் தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. இது நவம்பர் 1 ஆம் தேதியன்று 5 ஆயிரம் மெகாவாட் குறைந்து 11 ஆயிரம் மெகாவாட் ஆனது. இதேபோல், சென்னையில் தினசரி ஆவின் பால் 14.50 லட்சம் லிட்டர் விற்பனையாகும். இந்நிலையில், தீபாவளி காரணமாக கடந்த 2 நாட்களில் 2 லட்சம் லிட்டர் பால்விற்பனை குறைந்துள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.