states

தெலுங்கானா அமைச்சர் குற்றச்சாட்டு மோடி பிரதமரான பிறகு 8 மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய பாஜக!

ஹைதராபாத், ஜூன் 28- நரேந்திர மோடி பிரத மரான பிறகு, 8 மாநிலங்க ளில் பாஜக ஆட்சிக்  கவிழ்ப்பை அரங்கேற்றியி ருப்பதாக தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.சி. ராமா ராவ் குற்றச்சாட்டு எழுப்பி யுள்ளார். இதுதொடர்பாக நிகழ்ச்சி  ஒன்றில் அவர் மேலும் பேசி யிருப்பதாவது: நரேந்திர மோடி பிரதம ரான பிறகு, பாஜக-வினர்  மகாராஷ்டிராவில் மட்டுமல்  லாமல் சுமார் 8 வெவ்வேறு மாநிலங்களில் ஜனநாயகத்  தைக் காலில் போட்டு மிதித்து விட்டு, அரசாங்கங்களை அகற்றியுள்ளனர். கர்நாடகா, மத்தியப் பிர தேசம் மற்றும் கோவா, இப்  போது மகாராஷ்டிரா. அதற்கு முன்பும் பல மாநிலங்களில் பெரும்பான்மை பலம் இல்  லாத நிலையில் அந்த மாநி லங்களில் இந்த செயல் களை மேற்கொண்டனர். அதனால்தான் அரசியல மைப்பு இயந்திரத்தை பாஜக துஷ்பிரயோகம் செய்கிறது என்று சொல்கிறேன்.  இன்று சர்வாதிகாரம் நிலவுகிறது. இந்த சர்வாதி காரத்தை நிறுத்த யாராவது குரல் எழுப்ப வேண்டும். ஒரு  வேளை அந்தக் குரல் தெலுங்கானாவில் இருந்தும் எழலாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்?  இவ்வாறு கே.சி. ராமா ராவ் பேசியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்  வந்த் சின்ஹாவுக்கு தெலுங்  கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

;