தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “முதல மைச்சர், எதிர்க் கட்சித் தலைவர், அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்கப்படுமா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் மெய்ய நாதன், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அந்த அந்த தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுக்கப்படும்” என்றார்.