நாகர்கோவில், ஏப். 1 கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை நலத்துறையின் கீழ். கிராமப்புற இளைஞர் களை விவசாயத்தில் ஈடுபடுத்தி வேலை வாய்ப்பு பெற்றிட ஊக்குவிக்கும் வண்ணம் அங்கக வேளாண்மை உற்பத்தியாளர் என்ற தலைப்பில் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இப்பயிற்சி கிருஷ்ணன் கோவில் உழவர் பயிற்சி நிலைய பயிலரங்கில் 30 நாட்கள் நடை பெறும். ஏற்கனவே இப்பயிற்சியில் சேர விருப்பம் தெரிவித்து பதிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் பயிற்சி வகுப்பில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சத்திய ஜோஸ், உழவர் பயிற்சி நிலைய அலுவலக வேளாண்மை துணை இயக்குநர் அவ்வை மீனாட்சி உள்ளிட்டோர் பேசினர் .அங்கக வேளாண்மை குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககத்துறை வேளாண்மை உதவி இயக்கு நர் பயிற்சியளித்தார்.