சென்னை,ஜூன் 5- காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியதை செலுத்தினார். கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 5) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் சென்னை திருவல்லிகேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரி யாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன்.நேரு,மா.சுப்பிரமணியன்,ஆவடி நாசர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்,துணை மேயர்,அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தித் திணிப்பு எதிர்ப்பு - தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி - மத நல்லிணக்கம் - சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி எனத் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியச் சிறுபான்மை யினருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் பிறந்தநாளில் அவர்தம் தொண்டை நினைவு கூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.