சென்னை, ஜூன் 29- தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழி லாளர்கள் தாக்கப்படுவதாக தவறாக கட்டுரை வெளியிட்ட விவகாரத்தில் “தைனிக் பாஸ்கர்” பத்திரிகை ஆசிரி யருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி யது சென்னை உயர்நீதிமன்றம். தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழி லாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட வழக்கில் இந்தியா வின் மிகப்பெரிய இந்தி மொழி தின சரி செய்தித்தாள்களில் ஒன்றான “தைனிக் பாஸ்கர்” பத்திரிகை ஆசிரியரும், மத் தியப்பிரதேசத்தை சேர்ந்தவருமான பிர சூன் மிஷ்ரா முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய் தார். மனுவில், “கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுவதாகவும், சில தொழிலாளர்களின் விரல்கள் வெட்டப் பட்டதாகவும் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்தது. தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தி மொழி பேசியதற்காக தினமும் தாக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழி லாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வில்லை. தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம், அவ்வாறு பரப்பி னால் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து தமிழகத்தில் பீகார் தொழி லாளர்கள் தாக்கப்படுவதாகவும்,
14 பேர் வரை கொலை செய்யப்பட்டதாக வும், திருப்பூரில் சில தொழிலாளர்கள் இந்தி மொழி பேசியதற்காக தாக்கப் பட்டதாகவும் நேரடி தகவல்கள் கிடைத் தது. அதனடிப்படையிலேயே செய்தி வெளியிடப்பட்டது. மாறாக தமிழ்நாட் டில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்தில் செய்தி வெளியிடப் படவில்லை. இரு சமுதாயத்தினருக்கு இடையே பகையை ஏற்படுத்த வேண் டும் என்ற எண்ணம் இல்லை. அத னால், பீகார் தொழிலாளர்களின் கட்டு ரையை வெளியிட்டதற்காக தான் நிபந்த னையற்ற மன்னிப்பு கேட்கிறேன். என் மீது மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய் யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று மனுவில் பிரசூன் மிஷ்ரா குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதி பதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு பிறப் பித்த உத்தரவில், “ஆவடி காவல் நிலை யத்தில் ஒரு வாரமும், திருப்பூர் காவல் நிலையத்தில் ஒரு வாரமும் கையெ ழுத்திட வேண்டும். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக் கப்படுவதாக தவறாக கட்டுரை வெளி யிட்டதாக “தைனிக் பாஸ்கர்” பத்திரி கையில் செய்தி வெளியிட்டு 4 வாரத் திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்ற நிபந்தனையுடன் பிர சூன் மிஷ்ராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.