கிரேட் பிரிட்டனில் ரயில்வே தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி ஜூன் 21 ,22 ,23- ல் வேலை நிறுத்தம் செய்தனர். ஜூன் 25ல் திரும்பவும் வேலை நிறுத்தம் செய்தனர். அரசின் சிக்கன சீரமைப்பு நடவடிக்கைகளால் பெருமளவு ஆட்குறைப்பு செய்யப்படும். தொழிலாளி வர்க்கத்தினரும், குறைந்த வருமானம் உள்ள பகுதியினரும், வாழ்க்கைச் செலவினங்கள் கூடுதலால் மிகவும் அவதிப்படுகின்றனர். 50,000 ரயில்வே தொழிலாளர் பங்கேற்றனர். ஆர்எம்டி (Rail, Maritime, Transport Workers) சங்கத்தின் தலைமை யில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது .முற்போக்கு பிரிவினர், யுனைட் தி யூனியன் போன்ற தொழிற்சங்கங்கள், அகார்ன் யுகே உள்ளிட்ட குழுக்கள், இளம் கம்யூனிஸ்ட் கழகம் ,பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சி உட்பட பலரும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் எரிபொருள், உணவுப் பொருள்கள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து அமைப்பு களுக்கான செலவினங்களில் (38 ஆயிரம் கோடி ரூபாய்) 400 கோடி பவுண்டு குறைக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பாலான ரயில்வே தொழிலாளர்கள் ஆண்டுக்கு 25 ஆயிரம் முதல் 31,000 பவுண்டு மட்டுமே ஊதியமாக பெறுகிறார்கள். சராசரி தேசிய தொழிலாளி ஊதியம் 31285 பவுண்டு. ஆனால், ரயில்வே உயர் அதிகாரி கள் 10 லட்சம் பவுண்டு( ரூபாய் ஒன்பது கோடியே அறுபது லட்சம்) ஊதியமாக ஆண்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். அரசும், பல ஊடகங்களும் போராடும் தொழிலாளர் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றன. தற்காலிக தொழிலாளரை நியமித்து ரயில்வே வேலை நிறுத்தத்தை முறியடிக்கவும் அரசு முயற்சிகள் செய்து வருகிறது. ஆர்எம்டி சங்க உறுப்பினர்கள் எதிர்பார்ப்புக்கு மேல் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ரயில்வே தொழிலாளர் வெற்றி பெற வாழ்த்துவோம். தொழிலாளர் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜெர்மி கோர்பைனும் போராட்டத்தை வாழ்த்தியுள்ளார்.