states

ஒத்துழைப்பு உடன்பாடு

மனாகுவா, ஜூன் 27- மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை வழங்கும் ஏற்பாட்டிற்கான ஒத்துழைப்பு உடன்பாட்டில் ஈரான் மற்றும் நிகரகுவா ஆகிய இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஈரானின் பர்கத் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர் ராபர்ட் லோபஸ் நிகரகுவாவுக்கு பயணம் மேற்கொண் டார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரு நாடுகளின் மீதும் அமெரிக்கா போட்டுள்ள தடைகளைத் தகர்க்கும் வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். அத்தியாவசியத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை ஈரானிலிருந்து பெற்றுக் கொள்ள நிகரகுவா முடிவு செய்தது. ஈரானின் பர்கத் நிறுவனம் 41 ஆண்டுகால அனுபவம் வாய்ந்ததாகும். ஏற்றுமதியோடு, தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஈரான் தயாராக உள்ளது.