states

img

மாணவர்களிடையே சாதி அரசியலை ஊக்குவிக்கிறது பாமக: திருமாவளவன்

சென்னை, ஜூன் 24- உயர் கல்வித்துறையின் அரசாணையை வைத்து மாணவர்களிடையே பாமக சாதி அரசியல் செய்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.  திருமாவளவன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அது முடிவுறும் தருவாயில் உள்ளது. இச்சூழலில் பாமக நிறுவனர் வெளி யிட்டுள்ள அறிக்கை உயர் கல்வித்துறை மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிப்பதாக அமைந்துள் ளது. அத்துடன், மாணவர்க ளிடம் சாதி அடிப்படை யிலான இடைவெளியை உருவாக்குவதாகவும் உள்ளது. அவரது அறிக்கை உண்மையை திரித்து கூறுவதாக உள்ளது. அதாவது, உயர்கல்வித் துறையின் அரசாணை எண் 161 ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்க ப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்கள் முதலில் இஸ்லாமியர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும். அதன் பின்னரும் காலியிடங்கள் இருந்தால் அவை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பப்பட வேண்டும்.

போதிய எண்ணிக்கை யில் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் இல்லாத சூழலில் மட்டும்தான் அந்த இடங்கள் பட்டியலினம், பழங்குடியினரை கொண்டு நிரப்பப்பட வேண்டு மென்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது என பாமக நிறுவனர் அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அரசாணையில் அவ்வாறு எதுவும் கூறப் படவில்லை என்பதே உண்மையாகும். அதில்,  நிரப்பப்படாத பிற்படுத்தப் பட்டோருக்கான காலி யிடங்களை மற்ற சமூகத் தினரை கொண்டு நிரப்ப லாம் என்று தான் சொல்லப் பட்டிருக்கிறது. அதை தம்  விருப்பம் போல  அவர் திரித்துக் கூறுவது அதிர்ச்சி யளிக்கிறது. அரசுக் கல்லூரியில் சேரும் அந்த மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை உள்நோக்கம் கொண்ட சாதி அரசியல் போல் உள்ளது. கல்லூரி முதல்வர்கள் அச்சத்தைப் போக்கும் வகையில், மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், தற்போது நடை முறையில் உள்ள அர சாணை எண்-161 குறித்து  தெளிவை உருவாக்க தமிழ்நாடு அரசு உடனடி யாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.