சென்னை, மே 18- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.4.2023 முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை, ஒன்றிய அரசு தனது ஊழி யர்களுக்கு வழங்கியுள்ளது போல் 1.1.2023 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 விழுக்காடாக இருந்த அகவிலைப் படியை ஏப்ரல் 1 முதல் 42 விழுக் காடாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு 6 மாதங்க ளுக்கு ஒருமுறை விலைவாசி உயர்விற்கேற்ப அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. அதன்படி கடந்த ஜனவரி 1 முதல் ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 38 விழுக்காட்டில் இருந்து 42 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்க ளுக்கு ஜனவரி 1 முதல் 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை அறிவித் திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அறிவிக்காமல் கடந்த காலங்களில் வழங்கியது போலவே இப்போதும் மூன்று மாத அகவிலைப்படி உயர்வை பறித்துக்கொண்டு அறிவித்துள்ளது தவறான நடை முறையாகும். கொரோனா பெருந்தொற்றைக் காரணம்காட்டி பறிக்கப்பட்ட அக விலைப்படி உயர்வை இன்றுவரை திமுக அரசு தொடர்ந்து கொண்டி ருப்பது ஏற்க இயலாது. எனவே தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 4 விழுக் காடு அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1 முதல் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.