states

அறிவிப்புகளை அமல்படுத்தாத அதிகாரிகள்: முதல்வர் தலையிட மாற்றுத்திறனாளிகள் கடிதம்

சென்னை, மே 31- தமிழ்நாடு சட்டப்பேரவையின் அறிவிப்புகளை அமல்படுத்தாமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதால் முதலமைச்சர் தலை யிட வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன், பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி ஆகியோர் முதலமைச் சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு நடைபெற்று வருவதை வரவேற்கிறோம். மாநிலத் தின் கடைகோடி மாற்றுத்திறனாளி ஒருவர் கூட பாதிக்கக் கூடாது என  முதல்வரான தாங்கள் கடந்த சட்ட மன்ற கூட்டத்தின் போது அறிவித்தது  மாற்றுத்திறனாளி கள் அனைவருக் கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாற்றுத்திறனாளிகளின் மாதாந் திர உதவித்தொகை உயர்த்தப்பட வேண்டும் என்கின்ற எங்கள் அமைப் பின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று  ரூ. 500 உதவித் தொகை உயர்த்தி அறிவித்தது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், உதவித்தொகை உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆறு மாதங்களை கடந்த பிறகும், அதன் பலனை அனுபவிக்க முடியாமல் பரிதவித்துக் வருகின்ற னர். ரூ. 1500 உதவித்தொகை பெறு வதற்காக விண்ணப்பித்து, உதவித் தொகை கிடைப்பதற்கான அரசின் ஒப்புதல் உத்தரவு வழங்கப்பட்டும் கடந்த 10,11 மாதங்களாக மாநிலம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான மாற்றுத்திறனாளிகள் காத்துக் கிடக்கின்றனர். இவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புட னும், சிரமத்துடனும் மாவட்ட அதிகாரிகளை சென்று சந்தித்து பல முறை முறையிட்டும் கூட நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே, இதில் தாங்கள் தலையிட்டு உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை கிடைப்பதை உறுதி  செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், 2018ஆம் ஆண்டைய வரு வாய்த்துறை அரசாணை, மாநில  அளவிலும், மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் மாற்றுத்திறனா ளிகளின் குறைதீர் கூட்டங்கள் நடத்தப் பட வேண்டும் என்று வலியுறுத்து கிறது. கடந்த காலங்களில் மாநில  அளவில் வருவாய்த்துறை ஆணை யர் தலைமையில் மூன்று மாதங்க ளுக்கு ஒரு முறை இக்கூட்டங்கள் தவறாது நடைபெற்று வந்தது. தற்போது பல மாதங்களாக இக்கூட்டம் நடத்தப்படவில்லை என்பதை தங்களின் கவனத்துக் கொண்டு வருகிறோம். மாநில அளவில் மாற்றுத் திறனாளிகள் சம்பந்த பட்ட பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக பேசித் தீர்வு காண்பதற்கு வாய்ப்புள்ள இக்கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். மாநில அளவிலான இக்கூட்டங் கள் நடப்பதில் பலவீனம் உள்ள இந்த சூழ்நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குறைதீர்க் கூட்டங்கள் நடத்துவதி லும், கோட்டாட்சியர் தலைமையில் இக்கூட்டங்கள் நடத்தப்படுவதிலும் மிகவும் அலட்சியம் காட்டப்படுகிறது. எனவே மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை நடத்திட,  மாநில அளவிலான, வருவாய்த் துறை ஆணையர் தலைமையிலான குறைதீர் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவித்திருக் கிறார்கள்.

;