states

img

பாலக்காடு கொலைகள் கண்ணீரில் 2 குடும்பங்கள்

பாலக்காடு, ஏப்.18- தீவிரவாதத் தன்மைகொண்ட இரண்டு வகுப்புவாத சக்திகள் பழிக்குப்பழியாக ரத்தம் சிந்த வைத்ததால் இரண்டு குடும்பங்கள் பெரும் துயரத்தில் உள்ளன. பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் நான்கு குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்துள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் சுபைர், ஓட்டல் நடத்தி குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் தங்களது குடும்ப தலைவரை இழந்துள்ளனர். கடந்த வெள்ளியன்று வாப்பா  அபுபக்கர் முன்னிலையில் சுபைர் ஆர்எஸ்எஸ் கும்பலால்  வெட்டிக் கொல்லப்பட்டார். உம்மா நபீசா. மனைவி ஜீனத். சுபைரின்  மூத்த மகன் சுஹைப் கொழிஞ்சாம்பாறை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகன் சஹத் போல்புள்ளி அரசுப் பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார். இவரது இளைய மகன் சஜாத் எலப்புள்ளி உயர்நிலைப் பள்ளி மாணவர். ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான சீனிவாசனின் மரணத்தால் அவரது மனைவி மற்றும் மகள் தனிமையில் விடப்பட்டுள்ளனர். ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் நவநீதாவால் தன் தந்தை இல்லாததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவரது மனைவி கோபிகா கர்ணகியம்மன் எச்எச்எஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியையாகவும், மகள் நவநீதா கொப்பம் லயன்ஸ் பள்ளி மாணவியாகவும் உள்ளார்.