states

வள்ளியூரில் கண் பராமரிப்பு மையம் திறப்பு

திருநெல்வேலி, ஏப்.1- வள்ளியூர் பெருமாள் தெற்கு ரதவீதியில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், “2020 ஐகேர்  பை டாக்டர் அகர் வால்ஸ்” எனும் ஆரம்ப கண் பராமரிப்பு மையம் அமைக்கப்பட் டுள்ளது. அதற்கான தொடக்க விழா வில், வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதியும், சட்ட உதவிக்குழு வின் தலைவருமான பர்சாத் பேகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் வள்ளியூர் கிளை தலைவர் ஜார்ஜ் திலக், வழக்கறி ஞர் டேனியல் ராஜ் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்ட னர். டாக்டர் அகர்வால் குழும கண் மருத்துவமனைகளின் நெல்லை பிராந்திய மருத்துவ இயக்குனர் லயனல் ராஜ் கூறுகையில், “அடிப்படை கண் பராமரிப்பு சேவையை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்குமாறு செய்வதுமற்றும் சிறு  நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் கண் பராமரிப்பு  சேவைகளை தேடி பெறும் நிலையையும், விழிப்புணர்வை யும் அதிகரிக்க செய்வது இந்த மையத்தின் நோக்கம்” என்றார்.