புதுதில்லி, அக். 7 - அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந் துள்ளது. வியாழனன்று அமெரிக்க டால ருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 81 ரூபாய் 90 காசு களாக இருந்த நிலையில், வெள்ளிக் கிழமையன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் 32 காசுகள் சரிந்து 82 ரூபாய் 22 காசு கள் என்ற சரிவைக் கண்டது. இது காலை 11.30 மணியளவில் மேலும் 16 காசுகள் சரிந்து 82 ரூபாய் 38 காசு கள் என்ற வரலாற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பானது, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 2.20 சதவிகிதமும், அக்டோபர் மாதத்தில் கடந்த 4 நாட்களில் 1 சதவிகித மும், 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த மாக 10 சதவிகிதமும் சரிந்துள்ளது.
இதுவரை இவ்வளவு பெரிய சரிவை, இந்திய ரூபாய் மதிப்பு காணவில்லை. அதுமட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக நரேந்திர மோடி ஆட்சி யில் மட்டும் ரூபாய் மதிப்பு சுமார் 43 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 79 ரூபாய் 87 காசுகளாக இருந்தது. இது தற்போது ஒரு வாரத்திற்குள் 2 ரூபாய் 51 காசுகள் வீழ்ச்சி அடைந்து 82 ரூபாய் 38 காசுகள் ஆகியுள்ளது. இதனிடையே, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியானது தொடரும் என்றும், அடுத்த சில வாரங்களுக்குள் 84 ரூபாய் வரையில் சரியும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்த வாரம் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 0.8 சதவிகிதம் சரியும் நிலை யில் உள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதி கரிப்பு, வர்த்தகப் பற்றாக்குறை அதி கரிப்பு, அந்நியச் செலாவணி கை யிருப்பில் சரிவு ஆகியவை இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன.