states

“வெகு தொலைவில் இல்லை” சசிகலா பேட்டி

திண்டிவனம், ஜூன் 5-  விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே தனியார் மண்டபத் தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா கலந்து கொண் டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்;  அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்படும் தொண்டர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் தலைமை ஏற்றதும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு நல்ல பதவி கள் வழங்கப்படும். மக்கள் ஆதரவு எனக்கு அதிகள வில் உள்ளது. எம்ஜிஆர், ஜெயல லிதா வழியில் சிறந்த ஆட்சியை நான் வழங்குவேன், விரைவில் அதி முகவின் தலைமை பொறுப்பை ஏற்பேன். விரைவில் அதிமுக கொடி யையும் கட்சியையும் கைப்பற்று வோம் எனக் கூறினார்.