states

வளர்ச்சியின் பக்கம் மக்கள்; வாகை சூடியது இடது ஜனநாயக முன்னணி

திருவனந்தபுரம், மே 20 - கேரள உள்ளாட்சி இடைத்தேர்தலில், கே-ரயிலின் சில்வர் லைன் திட்டத்துக்கு எதிராக  வன்முறை போராட்டம் நடந்த இடங்களிலெல் லாம் காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) பின்னடை வை சந்தித்தது. சில்வர் லைன் ரயில்பாதை அமையும் 12 மாவட்டங்களில் உள்ள 42  உள்ளாட்சி வார்டுகளுக்கு நடந்த இடைத்தேர்த லில் இடது ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றது.  திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை யிலான சாலைப் போக்குவரத்து  நெருக்கடி மிக்கதாக உள்ளது. இந்த பகுதிகளில் நடந்த தேர்தல்களில் சில்வர்லைன் திட்டத்திற்கு எதி ரான- வளர்ச்சிக்கு எதிரான அரசியல் போரா ட்டத்தை மக்கள் நிராகரித்துள்ளதையே முடிவுகள் காட்டுகின்றன. திருவனந்தபுரம் மாவட்டம் நாவாய்க்குளம் பஞ்சாயத்து மருதிக்குன்னு வார்டில் பலத்த நால்முனைப் போட்டியில் எல்.டி.எப் வேட்பா ளர் வெற்றி பெற்றிருப்பது கே.ரயில் எதிர் ப்புப் போராட்டத்தை மக்கள் நிராகரித்த தற்கான சான்றாகும். இங்கு சில்வர் லைன் ரயில் பாதைக்கான அடையாள கல் பதிக்க வந்த அதிகாரிகளை காங்கிரஸ் கூட்டணி யினர் மூன்று முறை தடுத்தனர்.

எர்ணாகுளம் மாவட்டம் குன்னத்துநாடு ஊராட்சியின் 11ஆவது வார்டு கே.ரயில் கடந்து  செல்லும் பகுதியை எல்.டி.எப் கைப்பற்றி யது. கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த எல்.டி.எப்., இம்முறை அமோக வெற்றி பெற்றது. மலப்புரம் மாவட்டத்தில் ரயில்வேக்கு எதிராக கடும் அமளி நிலவி  வந்த நிலையில், வள்ளிக்குன்னு ஊராட்சி யின் பருத்திக்காடு வார்டை 280 வாக்குகள் வித்தியாசத்தில் எல்டிஎப் கைப்பற்றியது. இதேபோல் கண்ணூர் மாவட்டம் பைய னூர் நகராட்சியின் ஒன்பதாவது வார்டிலும் முழுப்பிலாங்காடு பஞ்சாயத்தின் தெக்கேக் குன்னும்புரம் வார்டுகளிலும் எல்.டி.எப் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற் றது. இந்த இரண்டு உள்ளாட்சி அமைப்புகளும் கே ரயில் செல்லும் பகுதிகளை உள்ளடக்கி யது. பையனூரில், யுடிஎப் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு டெபாசிட் பணம் கூட கிடைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எல்டிஎப் வேட்பாளர் பி.லதாவின் பெரும்பான்மை கடந்த முறை 644 வாக்கு களாக இருந்தது இம்முறை 828 ஆக அதி கரித்துள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில் முழப்பி லாங்காடு பஞ்சாயத்துக்கு வெளியூர் ஆட் களை வரவழைத்து கல் பிடுங்கும் போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கூட்டணி. முதல்வர் தொகுதியில் கல் பதிக்கவிடாமல் தடுக்கப்பட்ட தாக தொலைக்காட்சி சேனல்கள் கதை அளந்தன. இங்கு நடந்த தேர்தல் பிரச்சா ரத்துக்கு கேரள காங்கிரஸ் கமிட்டித் தலை வர் சுதாகரன் தலைமை தாங்கினார். ஒரு உறுப் பினர் ராஜினாமா செய்ததால் இங்கு தேர்தல் நடந்தது. அதில் எல்டிஎப் வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் 141 வாக்குகள் பெற்ற  பாஜக வேட்பாளர் இம்முறை 36 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

பாஜக நூற்றுக்கும் அதிக மான தனது வாக்குகளை விட்டுக்கொடு த்தும் காங்கிரஸ் கூட்டணியால் இங்கு வெற்றிபெற முடியவில்லை. யுடிஎப் தலைமையில் கே ரயிலுக்கு எதிரான முதல் போராட்டம் கொல்லம் மாவட்டம் கொட்டியத்தில் நடந்தது. சேனல் கேமராக் களுக்காக காங்கிரஸ் தலைவர்கள் போட்டி யிட்டதும் இங்குதான். கல்பதிக்க வந்த அதி காரிகளை தடுத்தனர். டிவி சேனல்கள் மணிக்கணக்கில் இதை நேரலை செய்தன. மாலை நேர விவாதத்தை நடத்தின. ஆனால் இதே கொல்லம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்த 6 வார்டுகளில் 5 வார்டுகளை எல்டிஎப் கைப்பற்றியது.     பினராயி விஜயனின் இரண்டாவது அரசின் முதலாம் ஆண்டு நிறைவு நாளில்  வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணி களுக்காக மக்கள் கரவொலி எழுப்பி அங்கீகரித்ததே இந்த வெற்றிக்கு அடிப்படை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உள்ளாட்சி இடைத் தேர்தலில்இடதுஜனநாயக முன்னணி (எல்டிஎப்) பெற்றுள்ள அமோக வெற்றி, கே ரயி லுக்கு எதிரான யுடிஎப்பின் பிரச்சாரத்தை கேரளம் நிராகரித்ததற்கு ஒரு சான்றாகும்.