states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜி-7 தலைவர்களுக்கு  பரிசுப் பொருட்கள் வழங்கிய மோடி

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா,  ஜப்பான், இத்தாலி ஆகிய 7 பணக்கார நாடுகள் இணைந்த ‘ஜி-7’ அமைப்பின்மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் நடைபெற்றது. ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் அழைப்பின் பேரில் ‘பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம்’ ஆகியவை தொடர்பான அமர்வில் இந்திய பிர தமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். இதனிடையே  ‘ஜி7’ நாடுகளின் தலைவர்களுக்கு கறுப்பு மண்பாண்டங் கள், இராமாயண டோக்ரா கலைப் பொருட்கள், குலாபி மீனா கரி புரூச் மற்றும் கப்லிங் செட்கள், பிளாட்டினத்தால் வர்ணம் தீட்டப்பட்ட தேநீர் கப்புகள், ஒரு லிட்டர் அளவிலான பாட்டீல்கள் கொண்ட ஜர்தோசி பெட்டி, மார்பிள் இன்லே டேபிள் டாப், வெண்கல குவளை, கோரைப்புல்லால் செய்யப் பட்ட கூடைகள், பருத்தித் துணிகள், அரக்கில் தயாரிக்கப்பட்ட ராமர் தர்பார், கைகளால் பின்னப்பட்ட பட்டுக் கம்பளம் ஆகியவற்றை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.

ஒருமுறை பயன்படுத்தும்  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடு தலை கட்டுப்படுத்தும் விதமாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை பயன்படுத்தும் (one use) வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம் மற்றும் விற்பனையை ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படு கிறது என்று ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒத்திவைக்க முடியாது:  ஜூலை 17-இல் ‘நீட்’ தேர்வு உறுதி!

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்  தேர்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு  முகமை அறிவித்து இருந்தது. இதனிடையே, கல்லூரி களில் இளங்கலை படிப்பில் சேருவதற்கான ‘கியூட்’ தேர்வு  ஜூலை 15 அன்றும், ஐ.ஐ.டி.யில் சேருவதற்கான ஜே.இ.இ.  மெயின் தேர்வு ஜூலை 21 அன்றும் நடக்கும் நிலையில், மாணவர்கள் ஒருவரே பல தேர்வுகளை எழுத முயற்சி  மேற்கொள்வதால், நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்  என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நீட் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

  1. விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய 179 பட்டாசு ஆலைகளில் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதில், 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் செவ் வாயன்று அனுமதி அளித்தார். மேலும் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலோ, பணியில் குழந்தைத் தொழி லாளர்களை ஈடுபடுத்தினாலோ ஆலையின் உரிமை நிரந்தர மாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  2. உற்பத்தி செலவு அதிகரித்ததன் எதிரொலியாக வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களின் விலையை ஜூலை முதல் உயர்த்த டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாகனங்க ளின் மாடல், வகைக்கு ஏற்ப 1.5 முதல் 2.5 சதவிகிதம் வரை விலை உயரும் என டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
  3. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாயக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் நள்ளிர வில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்க ளுக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
;