states

அதானி குழும ஸ்பான்சருடன் வழங்கும் விருதை பெற மறுப்பு

சென்னை, பிப்.8-  அதானி குழும ஸ்பான்சருடன் நியூ இந்தி யன் எக்ஸ்பிரஸ் இதழ் வழங்கும் விருதை பெற மறுத்துள்ள கவிஞர் சுகிர்தராணிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலத்  தலைவர் வாலண்டினா, மாநிலப் பொதுச்செய லாளர் ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் இந்தி யாவில் சிறந்த 12 பெண் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தேவி விருது வழங்குவதாக அறிவித்தது. அந்த 12 பெண் ஆளுமைகளில் கவிஞர் சுகிர்த ராணியும் ஒருவர். சமூகத்தில் நிலவும் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு எதிராக சமூக சிந்தனைமிக்க  கவிதைகள் பலவற்றை இந்த சமூகத்திற்கு படைத்தவர் இவர். ஜனநாயக மாதர் சங்கத் தின் செயல்பாட்டிற்கு கொள்கை அளவில் ஆதரவு தெரிவித்து வரும் கவிஞரும் கூட. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 2019 ஆம் ஆண்டு நடத்திய ‘வன்முறை யற்ற தமிழகம், போதையற்ற தமிழகம்’ என்ற  கோஷத்தை முன்வைத்து 400 கிமீ நடைபய ணத்தின் போது நேரடியாக வந்து வாழ்த்துக் களை தெரிவித்து, உதவிகளையும் செய்தவர்.

இவருக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் தேவி விருதை வழங்குவதில் ஜனநாயக மாதர் சங்கம் பெருமை கொள்கின்றது  அதே நேரம் இந்த விருதை அளித்த இந்தி யன் எக்ஸ்பிரஸிற்கு நன்றி தெரிவித்துள்ள கவிஞர் சுகிர்தராணி, அந்த விருது வழங்கும் நிகழ்விற்கு முதன்மை ஸ்பான்சர் அதானி குழுமம் என்பதை தெரிந்தவுடன் அவர், இந்த விருது எனது அரசியலுக்கும் நான் கொண்ட கொள்கைக்கும் சிந்தனைக்கும் எதிரான அதானி குழுமநிதி உதவியுடன் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால் இந்த விருதை பெறு வதில் எனக்கு விருப்பமில்லை. எனவே இந்த தேவி விருது பெறுவதை மறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.  கடந்த கொரோனா காலத்தை ஒட்டியும், ஒன்றிய அரசு பின்பற்றி வருகின்ற மக்கள் விரோத பொருளாதார கொள்கையை ஒட்டி யும் பல கோடி மக்கள் வறுமைக்குள் தள்ளப் படும் போது ஒன்றிய அரசின் பேராதரவால் குறுக்கு வழியில் பல லட்சம் கோடிகளை சம்பாதித்த அதானி குழுமம் சமீபத்தில் நடத்திய பங்குச் சந்தை சூதாட்டம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  இக்காலகட்டத்தில்  அக்குழுமத்தின் ஸ்பான்சர் நிகழ்ச்சியில் சமூக,பொருளாதார, பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கவிதை கள் படைக்கும் என் கையை நீட்டி அந்த விருதை வாங்க மாட்டேன் என்ற சுகிர்த ராணியின் கொள்கை பிடிப்பும், துணிவும் பாராட்டத்தக்கது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

;