states

விவசாயிகள்- ஏழை மக்களுக்காக போராடியவர் பி.காசியண்ணன்

சென்னை,ஜன.18- விவசாயிகள், ஏழை எளிய மக்களுக் காக போராடியவர்  விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பி.காசி யண்ணன் என்று அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு  புகழஞ்சலி செலுத்தியுள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்  பி. காசியண்ணனின் மறைவுச்  செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பதவியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டவர்.

விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைக ளுக்காக சீரிய முறையில் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிக் கண்டவர். கரும்பு விவசாயி களின் கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு  கரும்பு விவசாயிகள் சங்கம் நடத்திய பல்வேறு போராட்டங்கள், இயக்கங்க ளில் தன்னையும் இணைத்துக்கொண்டு ஒன்றுபட்ட போராட்டங்களிலும் பங்கெடுத்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், தோழர்கள் மீதும் அன்பான உறவை பேணிக்காத்து வந்தவர்.  தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட  போதிலும் அதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல் சமீபத்தில் பால்  உற்பத்தியாளர்கள் நடத்திய போராட் டத்தில் கலந்து கொண்டு போராட்டக் குணத்தை  வெளிப்படுத்தியவர். 8 ஆம் வகுப்பு வரை படித்த அவர், ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் கல்வி  பெற வேண்டுமென சீரிய நோக்கத் தோடு கல்வி அறக்கட்டளையை நிறுவி  கல்விச் சேவையை புரிந்து வந்தவர். வசதி வாய்ப்புகள் இருப்பினும் மிகவும் சாதாரண முறையில் அனைவரிடமும் அன்போடும், பண்போடும் பழகும் குணம் படைத்தவர். தனது இறுதி மூச்சுவரை விவசாயிகளுக்காகவும், ஏழை, எளிய மக்களுக்காகவும் போராடியவர். அவரது மறைவு விவசா யிகள் இயக்கத்திற்கும், தமிழ்நாடு விவசாயிகளுக்கும் ஏற்பட்ட பேரிழப் பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள உறவினர்கள், விவசாய பெருங்குடி மக்கள், தோழர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.