states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘இரட்டை என்ஜின் ஆட்சிக்கு மணிப்பூர் ஒரு பாடம்’

புதுதில்லி, மே 6- “மணிப்பூரில் இரட்டை  என்ஜின் அரசாங்கத்திற்கு (ஒன்றிய அரசிலும் பாஜக; மாநில அரசிலும் பாஜக) ஏற் பட்ட நிலையை பாருங்கள். இரண்டு என்ஜின்களுமே தோல்வி அடைந்துவிட்டன. மாநிலத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளால் மாநில அரசு உடைந்து விட் டது. ஒன்றிய அரசு அனைத்து பிரச்சனைகளுக்கும் பொறுப்பற்ற தீர்வுகளை கையாள்கிறது. இதனால்  கர்நாடக வாக்காளர்கள் போலியான ‘இரட்டை  என்ஜின் அரசு’ வாக்குறுதி  குறித்து கவனமாக இருக்க  வேண்டும்” என்று மூத்த காங்கி ரஸ் தலைவர் ப.சிதம்பரம் எச்சரிக்கை செய்துள்ளார்.

தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்!

சென்னை, மே 6- தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில், 2023-ஆம் நிதியாண்டில் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வுகள் அடிப்படையில், 2023-ஆம் நிதியாண்டின் முடிவில் 24.8 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டிபி-யுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 22.4 லட்சம் கோடி ரூபாயு டன் கர்நாடகா இரண்டாமி டத்தையும், 13.3 லட்சம் கோடி  ரூபாயுடன் தெலுங்கானா மூன்றாமிடத்தையும், 13.2 லட்சம் கோடி ரூபாயுடன் ஆந்திரப் பிரதேசம் நான்கா மிடத்தையும், 10 லட்சம் கோடி ரூபாயுடன் கேரளா ஐந்தாமிடத்தையும் பிடித் துள்ளன.

சமஸ்கிருத தேர்வில் முதலிடத்தில் முஸ்லிம் மாணவன்!

உத்தரப் பிரதேச சமஸ்கிருத வாரிய 12-ஆம் வகுப்புத் தேர்வில் முஸ்லிம் மாணவர் ஒருவர்  முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி யை ஒட்டியுள்ள சந்தவுலி மாவட்டத்தைச் சேர்ந்த சலாவுதீனின் மகன் இர்பான் (17). இவர், கடந்த  பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெற்ற உத்தரப் பிரதேச மத்யமிக் சமஸ்கிருத சிக்ஷா பரி ஷத்தின் உத்தர் மத்யமா -II (12 ஆம் வகுப்பு) தேர்வில் 82.17 சதவிகிதம் மதிப்பெண்களுடன் முத லிடம் பெற்றுள்ளார். தனது மகனின் இந்த சாதனைக்காக இர்பானின் தந்தை சலாவுதீன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “’ஒரு முஸ்லிம், சமஸ்கிருதம் கற்க முடியாது, ஒரு இந்து, உருதுவை கற்க முடியாது’ என்று சொல்வதை நான் முற்றிலும் மறுக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

‘மக்களின் அன்பு என்னை உணர்ச்சிவயமாக்கி விட்டது’

“என்சிபி தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தேன். 63 ஆண்டு கள் பொது வாழ்வில் இருந்த நான், எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் விடுபட விரும்பி னேன். ஆனால், எனது முடிவை மக்கள் விரும்பவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் எனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும், மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்னை கட்சியின் தலை வராக நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மக்களின் உணர்வுகளை என்னால் மீற முடியாது. உங்கள் அன்பு என்னை உணர்ச்சிவசப்படுத்தியது. என்சிபி உயர்மட்டக் குழு வின் முடிவு எனக்கு தெரிவிக்கப்பட்டது, அதை நான் மதிக்கிறேன். எனவே, பதவியை ராஜி னாமா செய்யும் முடிவை வாபஸ் பெறுகிறேன். புதிய உற்சாகத்துடன் கட்சிக்காக பணியாற்ற உள்ளேன்” என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு மா.சுப்பிரமணியன் கண்டனம்

சென்னை, மே 6- சென்னை பெரும் பாக்கத்தில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கிவைத்தப் பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்க ளிடம் பேசினார். அப்போது அவர், குழந்தை திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை நடந்ததாக நடக்காத ஒன்றை நடந்த தாக கூறுவது, ஆளுநர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்றார். அவர் சொன்ன குற்றச்சாட்டுக்காக தேசிய குழந்தைகள் பாது காப்பு ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது. ஒரு வாரத்தில் அறிக்கை கேட்டுள்ளது. சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் கூறியது தொடர் பாக மருத்துவ அலுவலர் கள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அவர்கள் விசாரணையில் அப்படி எதுவும் நடைபெற வில்லை என்பது உறுதி யாகி உள்ளது. அரசின் மீது  ஏதாவது குறை சொல்ல  வேண்டும் என்பதற்காக ஆளுநர் ரவி பூதக்கண் ணாடி போட்டுக் கொண்டு ஏதாவது கிடைக்காதா? என்று தேடி தேடி அலை கிறார். எதுவும் கிடைக்காத தால் ஒரு சிறுமியை சாட்சி யாக வைத்து தவறான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறி னார்.

ஆளுநர் ரவி குழப்பம் செய்து கொண்டிருக்கிறார் : வைகோ

சென்னை. மே 6- ம.தி.மு.க 30-வது ஆண்டு தொடக்க விழாசென்னை எழும்பூர் தாயகத்தில் சனிக்கிழமை (மே 6)  நடந்தது.  பொதுச்செயலாளர் வைகோ கட்சி கொடியேற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர்  கூறியதாவது:- மதிமுக எத்தனையோ ஏமாற்றங்கள், சோதனைகள், துரோகங்களை கடந்து  இன்று 29 ஆண்டுகளை கடந்து 30-வது  ஆண்டில் நிற்கிறது. தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என். ரவி காலாவதியாகிப் போன ஒரு மனிதர். தமிழ்நாட்டில் வந்துகுழப்பம் செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடுகள் முரண் பட்டவையாக உள்ளது.  தமிழகம், பெரிய தலைவர்கள் மற்றும் எத்தனையோ சோதனைகள் கடந்து  வளர்ந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் ரவி  உளறிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. அரசின்  இரண்டாண்டு ஆட்சி. அனைத்து தரப்பு மக்களுடைய ஆவலை பூர்த்தி செய்கின்ற ஆட்சியாக ஸ்டாலின் தலைமையில் வெற்றி கரமான ஆட்சியாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை 

சென்னை, மே 6- பகுதி நேர ஆசிரியர்களை பணி  நிரந்தரம் செய்யவேண்டும் என்று  மனிதநேய மக்கள் கட்சித் தலை வர் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண் டுள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறிருப்ப தாவது:- கடந்த தேர்தலில் தி.மு.க. தனது  தேர்தல் அறிக்கையில் பகுதி நேர  ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்ற வாக்குறுதி அளித்தது. அதனை பின்பற்றி தமிழக  அரசு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அடிப்படை  பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய முடியாத அவல நிலையில் இருக்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்களின் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும். அவர் களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

திவாலாகும் நிலையில் 186 அமெரிக்க வங்கிகள்

வாஷிங்டன், மே 6- தொடர்ந்து அமெரிக்க வங்கிகள் திவாலாகி வரும் நிலையில், மேலும் 186 வங்கிகள் திவாலுக்கு மிக அருகில் இருப்பதாக யுஎஸ்ஏ டுடே ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. வங்கிகள் மீதான நம்பிக்கை மக்களிடம் தகர்ந்து வருவதால் தங்கள் பணத்தை மக்கள் எடுக்க விரும்புகிறார்கள். அதில் பலரின் கணக்குகள் காப்பீடு செய்யப்படாத வையாக இருக்கின்றன. இந்தக் காப்பீடு செய்யப்படாதவர்களில் பாதிப்பேர் தங்கள் பணத்தை வெளியே எடுக்க முடிவெ டுத்தால் உடனடியாக 186 வங்கிகள் திவால்  நிலைக்கு தள்ளப்படும் என்று யுஎஸ்ஏ டுடே  செய்தி எச்சரிக்கிறது. மார்ச் மாதத்தில் இருந்து மூன்று பிராந்திய வங்கிகள் திவால் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும் வங்கி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்கதையாகி விடுமா என்ற கேள்வியை யுஎஸ்ஏ டுடே எழுப்பியுள்ளது. மீண்டும் 2008 ஆம் ஆண்டில் நடந்த அழிவை நோக்கி அமெரிக்க வங்கிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றும், அந்த அழிவில் இருந்தே இன்னும் மீள வில்லை என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். வங்கிகளின் சொத்து மதிப்பு பெரும் சரிவைக் கண்டதுதான் முக்கியமான பிரச்ச னையாகச் சொல்கிறார்கள். கொரோனா காலத்தில் சொத்துக்களை வாங்கிக் குவிக்க வங்கிகள் முற்பட்டன. அந்தச் சொத்துக்க ளின் மதிப்பு கொரோனாவுக்குப் பின்னால்  அதிகரிக்கும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு  பொய்த்துள்ளது. சாதாரண மக்களின் பணத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க வங்கி அமைப்பையே பல நிபுணர்கள் கேள்விக்கு உட்படுத்தி யுள்ளனர்.

ம.பி.யில்  ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு

போபால், மே 6- “லவ் ஜிகாத் வலையில் சிக்கிக்கொள்கின்ற பெண்  குழந்தைகளின் வாழ்க்கை எப்படி நாசமாகிறது என்  பதை ‘தி கேரளா ஸ்டோரி’  படம் எடுத்துரைக்கிறது.  இது பயங்கரவாதத்தின் வடி வமைப்பையும் அம்பலப்  படுத்துகிறது. நாங்கள் கட்  டாய மதமாற்றத்திற்கு எதி ராக ஒரு சட்டத்தை ஏற்க னவே மத்தியப்பிரதேசத்தில் கொண்டு வந்திருக்கிறோம். இந்த கேரளா ஸ்டோரி படம் அதுகுறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனைஅனைவரும் பார்க்க வேண்டும், என்ப தால், மத்தியப் பிரதேச அரசு  இப்படத்திற்கு வரிவிலக்கு  அளிக்கிறது” என்று அம்மாநில  பாஜக முதல்வர்சிவராஜ் சிங்  சவுகான் அறிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைத் தங்கள் இருதரப்பு உறவை மேம்படுத்தும் ஒரு மேடையாக பயன்படுத்திக் கொள்ள சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர் கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “மார்ச் மாதத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மேற்கொண்ட ரஷ்யப் பயணம் இரு தரப்பு உறவுகளுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

தனது தங்க வளத்தை கூடுதல் இருப்பு வைத்துக் கொள்வ தில் தென் அமெரிக்க நாடான பொலிவியா கூடுதல் முனைப்பைக் காட்டி வருகிறது. உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடமிருந்து தங்கத்தை வாங்கி அதைத் தனது இருப்பு சொத்தாக சர்வதேச அளவில் காட்டுவது என்று முடிவெடுத்தி ருக்கிறார்கள். இதற்கான புதிய சட்டத்திற்கு 10 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராகப் போரிட தேசிய அளவிலான ஊடகக்குழுவை நைஜீரிய அரசு அமைத்தி ருக்கிறது. இது குறித்துப் பேசிய அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் லாய் முகமது, “ஊட்டச்சத்து குறைபாடு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடம் என்ற மோசமான நிலையில் நைஜீரியா இருக்கிறது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.