சென்னை, ஏப்.27- தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் - வேலையின்மைக்கான உத வித்தொகை வழங்கிட வெளி யிடப்பட்டுள்ள அரசாணை எண் 41இல் உரிய திருத்தங் கள் செய்து அமல்படுத்தக் கோரி ஊரக வளர்ச்சி - ஊராட்சித்துறையின் அரசு முதன்மை செயலாளருக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதம் வரு மாறு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட அம லாக்கத்திற்கான நடவ டிக்கைகளை செயல்படுத் தும் துறைகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகை யில், விவசாயத்தொழிலா ளர் சங்கத்தின் அகில இந் திய அமைப்பும்,
தமிழ்நாடு அமைப்பும் 15 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் “வேலையில்லாக் கால நிவாரண உதவி 2022- க்கான வரையறைகள் வெளி யிடப்பட்டுள்ளதை வர வேற்கிறோம். வேலை யின்மைக்கான உதவித் தொகை வழங்கிட சட்டத்தில் ஏற்கனவே விதிகள் இருந்தும் அதை 15 ஆண்டுகளில் ஒரு ஊராட்சியில் கூட அமல் படுத்தாத துரதிர்ஷ்ட நிலை யைச் சுட்டிக்காட்டுகிறோம். இராஜஸ்தான் மாநிலத் தில் நடைமுறையில் உள் ளது போல வேலையின்மைக் கான உதவித் தொகை பெற பதிவு செய்திட இலவச தொடர்பு எண் அறிவிக்க வேண்டும். ஊராட்சி கேட்பு பதிவேடு பதிவை உத்தரவாதப்படுத் திட வேண்டும்.அறிவிக் கப்பட்டுள்ளவாறு உதவித் தொகை பெற பதிவு செய்திட ஊராட்சி செயலர் முழு பொறு ப்பு அதிகாரி என்பதை உறு திப்படுத்திட வேண்டும். கிராமப்புற வேலைத்திட் டத்தின் பயனாளிகளில் கணி சமானவர்கள் கல்வி வாய்ப்பு அற்றவர்களாக - குறை கல்வி பெற்றவர்களாக ஏழைகளாக இருப்பதை கவனத்தில் கொண்டு “வேலையின்மை உதவித் தொகை” பெறும் வழிமுறை களை எளிமையாக்கிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.