states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான லூயிஸ் லூலா டி சில்வா வெற்றி பெறுவார் என்று தற்போதைய ஜனாதிபதியும், வலதுசாரி வேட்பாளருமான ஜெய்ர் போல்சானரோ மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தல் கணிப்புகள் பற்றிப் பேசிய அவர், முதல் சுற்றிலேயே லூலா வெற்றி பெற்று விடுவார் என்று நினைக்கிறீர்களா என்று தனது டுவிட்டர் பதிவில் கேள்வியை எழுப்பியுள்ளார். கணிப்புகளில் இருவருக்கும் இடையில் 10 முதல் 15 விழுக்காடு வரையில் வாக்குகள் வித்தியாசம் இருக்கும் என்று வெளியாகி வருகின்றன.

ரஷ்யாவின் உட்முர்ட் மாகாணத்தின் இசெவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளிக்கூடமொன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டவர் தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். நாஜிக்களின் அடையாளத்தைக் கொண்ட உடையை அவர் அணிந்திருந்தார். அவரது யார் என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது.

டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளோடு ஜபோரோஸ்யே மற்றும் கெர்சோன் ஆகிய பகுதிகளில் ரஷ்யாவுடன் இணைவது பற்றிய பொது வாக்கெடுப்பு நடந்தது. செப்டம்பர் 27 ஆம் தேதியோடு இந்த வாக்கெடுப்பு நிறைவு பெற்றது. முதல் மூன்று நாட்கள் நடந்த வாக்கெடுப்பிலேயே  50 விழுக்காட்டிற்கும் மேலாக வாக்குப் பதிவாகியதால் இந்தப் பொது வாக்கெடுப்பு செல்லத்தக்கதாகி விட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 80  விழுக்காடு வாக்குகள் வரையில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;