பொன்விழா காணும் கிண்டி பாம்பு பண்ணை!
சென்னை,ஜூன் 20- கிண்டியில் உள்ள பாம்பு பூங்கா சிறப்பு பெற்றது. இது புகழ்பெற்ற ரோமுலஸ் விட்டேக்கர் என்பவரால் கடந்த 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பாம்புகளை பராமரிக்கவும், காட்சிப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பாம்பு பண்ணை தொடங்கப்பட்டது. இது லாப நோக்க மற்று செயல்பட்டு வரு கிறது. இதன் மூலம் பாம்புகள் மற்றும் பிற ஊர்வன விலங்குள் மீது பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்த தூண்டுகிறது. இது இந்தியாவின் முதல் ஊர்வன பூங்காவாகும். சென்னையின் புறநகரில் உள்ள சேலையூரில் முதலில் நிறுவப்பட்டது. பின்னர் ஒரு குழுவின் உதவியுடன் சென் னையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், 1972 ஆம் ஆண்டு கிண்டியில் பாம்பு பூங்கா அமைக்கப்பட்டது. தமிழக அரசின் வனத் துறையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட நிலத் தில் பாம்பு பண்ணை அமைந்துள்ளது. இதனை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது. மிகவும் சிறப்பு மிக்க கிண்டி பாம்புபண்ணை அதன் வெற்றிகரமான 50 ஆண்டுகளை நிறைவு செய்து, செவ்வாயன்று (ஜூன் 21) பொன்விழா விழாவைக் கொண்டாடு கிறது.
ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்
சென்னை,ஜூன் 20- சென்னை ஐஐடியில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கான எஸ்டிஇஎம் என்ற கோடைகால பயிற்சி திட்டத்தை பள்ளிகல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அறிவியல் தொழில்நுட்பம் பொறி யியல் மற்றும் கணிதத்தில் நூறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக சென்னை ஐஐடி சார்பில் ஜூன் 20 முதல் 25ஆம் தேதி வரை பயிற்சி திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “சென்னை ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார். மாநில கல்விக்கொள்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும், குழுவின் ஒவ்வொரு கூட்டத்தி லும் மாநில கல்வி கொள்கை வளர்ச்சி அடையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜூன் 24 - மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று
சென்னை, ஜூன் 20- பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்கா லிக மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்களன்று (ஜூன் 20) வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கைக்காக மதிப்பெண் சான்றி தழ்கள் தேவைப்படுவதால்; தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வுத்துறை இணையதளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியீடு வெளியிடப்பட இருக்கிறது. மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் சேது ராமவர்மா தெரிவித்துள்ளார்.தேர்வில் தேர்ச்சிபெறாத 12ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கான உடனடித் தேர்வுகள் ஜூலை 25 ஆம் தேதியிலிருந்து நடைபெறும் எனவும், 10ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கான உடனடித் தேர்வுகள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் கொடுத்து பணி பெற முடியாது - நீதிமன்றம்
அரசுத் துறைகளில் உயர் பதவிகளில் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக ஜெகன்நாதன், இந்துமதி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையின்போது, அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடவடிக்கைகள் மூலம் தான் பெற வேண்டுமே தவிர லஞ்சம் கொடுத்து எந்த பணியும் பெற முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும் எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு நடவடிக்கைகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர் நிலை என்னவாகும் என்ற குற்ற உணர்வு இல்லாமல், அனைத்தும் தெரிந்தே மனுதாரர் ரூ. 78 லட்சம் லஞ்சமாக கொடுத்துள்ளதால் அவரது மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிவிட்டது .
நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 80,000 பேருக்கு சிகிச்சை
சென்னை,ஜூன் 20- இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், சிகிச்சைப் பெற்றுவரும் 80 ஆயிரமாவது பயனாளியை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், விபத்துக்களிலிருந்து மனித உயிர்களைக் காப்பதற்கு நாட்டிலேயே தமிழகத்தில் இந்ததிட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.