states

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது சாத்தியமில்லை: உயர்நீதிமன்றம்

மதுரை, செப். 27- தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி யில் ஆன்லைன் விளையாட் டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர் களில் இணையத்தில் அந்த  விளையாட்டு வந்து கொண்டேதான் இருக்கிறது இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத  காரியமாகவே உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவியின் தாய்,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகள் அதிக மாக ஆன்லைன் விளை யாட்டுக்கு அடிமையானவர் என்றும் ஆன்லைன் விளை யாட்டின்போது ஒரு நபரு டன் பழக்கம் ஏற்பட்டு தனது மகள் சென்றுவிட்டார், எனவே அவரை கண்டு பிடித்து தரவேண்டும் என்றும்  தெரிவித்திருந்தார். நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் இளம் பரு வத்தினர் ஆன்லைன் விளை யாட்டுகளில் மூழ்கி தனி  உலகத்தில் வாழ்ந்து வரு கின்றனர். நிஜ வாழ்க் கையை ஏற்க மறுக்கின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரும் செல்போனில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர்  பேசிக்கொள்வதே இல்லை.  பிரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தை களிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந் துள்ளது. தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி யில் ஆன்லைன் விளையாட் டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து  கொண்டேதான் இருக்கி றது. இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கருத்து தெரி வித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

;