சென்னை, ஆக. 3 - தகவல் தொழில்நுட்பம் (ஐடி), தகவல் தொழில்நுட்ப சார்பு (ஐடி இஎஸ்) தொழிலாளர்களுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் 23 வெகுமக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தை (மெஸ்) தொடங்கி உள்ளன. இந்த அமைப்பு சார்பில் ஆக.1 அன்று சென்னையில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழகத்தில் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஐடி, ஐடி சார்பு துறைகளில் வேலை செய்கின்றனர். இந்த துறையின் மூலம் வருடத்திற்கு ஏறத்தாழ 1.4 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்த துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்துவ திலும் ஏற்றுமதி வருவாய் ஈட்டுவதி லும் முதலிடத்தில் இருக்கிறது. இருப்பினும் இந்த துறையில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு சட்டப்படி யான சமூக பாதுகாப்பை பெரும் பாலான நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. பணி பாதுகாப்பின்றி திடீர் பணி நீக்கம், ஆட்குறைப்பு வேலை இழப்பு நடவடிக்கைகள் மூலம், தற்போதுள்ள சமூக பாதுகாப்பு உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த துறையில் நிரந்தரமாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது கடினம். மேலும். எந்த ஒரு ஊழியரும் பணி ஓய்வு பெறுவதை பார்க்க முடியாத நிலைதான் உள்ளது. நிலையற்ற, நிரந்தரமற்ற வேலைத் தன்மையின் காரணமாக ஊழியர்கள் பல்வேறு உடல் உபா தைகளுக்கு, குறிப்பாக மன உளைச் சலும், உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆகவே, ஐடி ஊழியர்கள் பணிபுரியும் சூழலை கணக்கில் எடுத்து அவர்களை பாது காப்பது; நலனை பேண முன் முயற்சி களை அரசு எடுக்க வேண்டும். குறிப்பாக, கேரள அரசை போன்ற தகவல் தொடர்பு சார்பு தொழில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு நலவாரியம் போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.