states

மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள்

சென்னை, நவ. 29- தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்து வக் கல்லூரிகளை தொடங்க ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்க உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். சென்னை ஸ்டான்லி மருத்து வமனையில் கை அறுவை சிகிச்சை  சிறப்பு மேற்படிப்பு, புனரமைக்கப் பட்ட நூற்றாண்டு கட்டட நிர்வாக அலுவ லகம் திறப்பு, மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தல், நுண்ணுயிர்கொல்லி பயன்பாட்டுக் கொள்கை குறித்த புத்தகம் வெளியீடு ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் முதன் முறையாக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், “கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு மேற்படிப்புக்கான 2 இடங்கள்” செவ்வாயன்று தொடங்கி வைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இங்கு செய்யப்பட்டது. இந்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைக்கென தமிழக அரசால் ரூ.4.7 கோடி செலவில் மூன்றாம் தளம் கட்டப்பட்டு திறந்து வைக்கப் பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் பழு தடைந்த லிப்ட்கள் அனைத்தையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் நாட்டில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரி கள் தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அமைச்சரை சந்திக்க தாம் நேரம் கேட்டுள்ளதாக கூறினார். தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்றவைகளின் விற்ப னையை தடுப்பதோடு, வெளி மாநி லங்களில் இருந்து தமிழகத்திற்கு வரு வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்றார். இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா விற்ப வர்களின் சொத்துக்களை பறி முதல் செய்யும் நடவடிக்கை நடை பெறுவதாகவும், குட்கா எங்கு விற்கப் படுகிறது என தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

;