states

img

இந்தியன் ஆயில் தமிழ்நாடு - புதுச்சேரி புதிய செயல் இயக்குநர்

சென்னை,மே 17-  இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செயல் இயக்குநர் மற்றும் மாநிலத் தலை வராக வி.சி. அசோகன் பொறுப்பேற்றுள்ளார். இவர் இந்தியன்ஆயில் நிறுவனத்தின் மாநிலத் தலைவராக மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் எண்ணெய்  நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் (எஸ்எல்சி)  செயல்பட உள்ளார்.   இவருக்கு இந்தியன்ஆயில் நிறுவ னத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பரவலான அனுபவம் உள்ளது. குறிப்பாக, இவர் சில்லறை விற்பனை, செயல்பாடுகள் மற்றும் சர்வதேச மார்க்கெட்டிங் ஆகிய வற்றில் தேர்ந்த அனுபவம் பெற்றவர்.  அவர்  பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதோடு எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் உலக அளவிலான முன்னணி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செய லாற்றி வந்துள்ளார்.